Home செய்திகள் இந்தியா லடாக்கில் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க இந்தியா – சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் நேரில் சந்திப்பு !

லடாக்கில் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க இந்தியா – சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் நேரில் சந்திப்பு !

378
0
Share

கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட பிரச்சினையைத் தவிர்க்க இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் தற்போது நேரில் சந்தித்துப் பேசி உள்ளனர்.

ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவம் இடையே லடாக் எல்லையில் ஏற்பட்ட சண்டை காரணமாக இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் இருநாட்டு எல்லையிலும் ராணுவ வீரர்கள் குவித்த வண்ணம் உள்ளனர். பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் இது வரை பதற்றம் தணிந்த வாரில்லை.

சீசா விளையாடும் தங்கம் விலை!!

இத்தகைய சூழலில் நேற்று இரவு ரஷ்ய தலைநகரான மாஸ்கோவில் இந்தியா – சீனா இரு ஆகிய நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் நேரில் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தை சீன தரப்பிலிருந்து அழைப்பு வந்ததன் அடிப்படையிலேயே நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணிக்குத் தொடங்கிய பேச்சுவார்த்தை 3மணி நேரம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இதில் பேசிய ராஜ்நாத்சிங் இரு நாடுகளும் பாதுகாப்பு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றோடு ஆக்கிரமிப்பு மனப்பான்மை இல்லாமல் இருக்க வேண்டும். சர்வதேச விதிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் ஒரு நாட்டு எல்லையில் ஏற்பட்ட பிரச்சினைக்காக இரு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது,.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here