Home செய்திகள் இந்தியா 7ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாகிறது இந்தியா – சீனா ராணுவம்!…

7ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாகிறது இந்தியா – சீனா ராணுவம்!…

304
0
china meet india
Share

எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் இந்தியா – சீனா ராணுவத்தின் 7ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 12ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இருநாட்டு ராணுவத்திற்கும் இடையேயான மோதல் வலுத்து வருகிறது.

கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருநாட்டு ராணுவத்திற்கும் இடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து எல்லையில் மேலும் பதற்றம் அதிகரித்தது.

இதயத்துடிப்பைக் கண்காணிக்கும் தொழில்நுட்பம் குறித்து வெளியான ஆய்வு தகவல் !

இதனால், பதற்றத்தை தணிக்கும் வகையில் பல்வேறு கட்டங்களாக இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான 7-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை வரும் அக்டோபா் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவுத்துறை பிரதிநிதிகளும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here