Home செய்திகள் இந்தியா இதயத்துடிப்பைக் கண்காணிக்கும் தொழில்நுட்பம் குறித்து வெளியான ஆய்வு தகவல் !

இதயத்துடிப்பைக் கண்காணிக்கும் தொழில்நுட்பம் குறித்து வெளியான ஆய்வு தகவல் !

374
0
Share

இன்றைய நவீன உலகத்தில் ஏராளமான இயந்திரங்களும், டெக்னாலஜிகளும் வளர்ந்து வருகின்றன. இதனால் மனிதர்களுக்கு நோய்களும் அதிகரித்து வருகின்றன. எனவே மனித உடலைக் கண்காணிக்க பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களும் இன்றைய உலகத்தில் அதிகரித்துவிட்டது.

அந்த வகையில் மனிதர்களின் இதயத் துடிப்பை கணக்கிடும் அளவுமானி ஏராளமான ஸ்மார்ட் சாதனங்கள் தற்போது உருவெடுத்துள்ளது. ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் மொபைல் போன்ற பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்பம் நிறைந்த சாதனங்கள் இன்றைய நவீன உலகத்தில் மனித இதயத்துடிப்பைக் கணக்கிடும் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் ஸ்மார்ட் கைக்கடிகாரம் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து ஒரு ஆய்வை counter point research என்ற நிறுவனம் மேற்கொண்டது.

டெல்லி டூ லண்டன் ! உலகின் நீண்ட பேருந்து சேவை… கட்டணம் கம்மிதான்.

ஆய்வு முடிவில் இன்றைய உலகத்தில் 60% பேர் இந்த ஸ்மார்ட்வாட்ச் பயன்படுத்துகின்றனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இப்படி நாளுக்கு நாள் புதுப்புது தொழில் நுட்பத்தை மனிதர்கள் பயன்படுத்துவதால் ஏதாவது விளைவு ஏற்படுமோ என்ற பயத்தையும் அதிகரித்துள்ளது.

இதே போல் இதயத்துடிப்பைக் கண்காணிப்பது போன்று மனித ரத்தத்தில் உள்ள ஒட்சிசனின் அளவையும் அளவிடும் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்மார்ட் கடிகாரங்களையும் அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here