Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் ‌‌பிரண்டையின் அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்!…

‌‌பிரண்டையின் அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துகொள்வோம்!…

724
0
pirandai
Share

பிரண்டையின் தண்டுப்பகுதியும் வேர்ப்பகுதியும் எலும்பு முறிவுக்கு மகத்தான மருந்து. ‌பிரண்டைத் துவையலை முதுகு வலியால் பாதிக்கப்பட்டோர் தண்டுவடத்தில் பிரச்சனை உள்ளோர் எடுத்துக்கொண்டால் குணம் பெறலாம்.

பால்வினை நோயால் பாதிக்கப்பட்டோர் பிரண்டையுன் புளி வைத்து அரைத்து துவையலை தொடர்ந்து சாப்பிட்டால் குணம் பெறலாம்.‌

‌உடல் வலியால் அவஸ்தைப் படுபவர் பிரண்டைச்சாற்றை அருந்தினால் வலியிலிருந்து விடுபடலாம். ‌ஆயுர்வேத மருத்துவத்தில் முடக்குவாத நோய்களுக்கு (ஆர்த்தரிடிஸ்) பிரண்டைச்சாறு முக்கியப் பங்காற்றுகிறது.

‌மாதவிடாய் நின்றதும் பெண்கள் எலும்புகள்அரித்து துளைகளாக மாறி எலும்பு எளிதில் முறிந்து விடும். பிரண்டையை பயன்படுத்தினால் எலும்புகள் வலுவாகும்.

எளிதில் கிடைக்கும் புதினாவில் இத்தனை மருத்துவ குணங்கள் உள்ளதா?…

பிரண்டைச்சாறு மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது. ‌பிரண்டைச்சாறு பல்ஈறுகளில் இரத்தம் கசியும் ஸ்கர்வி நோயை குணப்படுத்துகிறது.

‌காதில் சீழ்வடிபவர்கள் பிரண்டைச்சாறு அருந்தினால் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். பிரண்டைச்சாறு ஆஸ்மாவுக்கு மருந்தாக பயன்படுகிறது.

‌மூக்கில் இரத்தம் வடியும் பிரச்சனை உள்ளவர்கள் பிரண்டைச்சாறு அருந்தினால் விடுபடலாம். கால்நடைகளுக்கு தீவனத்துடன் பிரண்டையை தருவதால் பால் சுரப்பு அதிகமாகிறது.
‌‌
‌பிரண்டைச்சாறு தீப்புண் மற்றும் தீக்காயங்களை ஆற்றுகிறது விஷ பூச்சிகடிகளை குணப்படுத்த பயன்படுகிறது. ‌படுக்கை புண்களை ஆற்றுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here