Home செய்திகள் இந்தியா இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டு வரும் தமிழகம் உட்பட 5 மாநிலங்கள்…

இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டு வரும் தமிழகம் உட்பட 5 மாநிலங்கள்…

997
0
indian economy
Share

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து அனைத்து உலக நாடுகளும் ஊரடங்கைப் பிறப்பித்தது. இதனால் உலகம் முழுவதும் மிகுந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. தற்போது அனைத்து நாடுகளும் அதிலிருந்து மெதுவாக மீண்டு வருகிறது.
அதேபோல் இந்தியாவிலும் தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், கேரளா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து வேகமாக மீண்டு வருகிறது என்று ஆய்வறிக்கையில் கூறுகின்றனர்.
moneyபொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதில் தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்கள் முன்னணியில் உள்ளதாக ஒரு பொருளாதார நிபுணர் கரீமா கபூர் தனது  ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்  மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட தளர்வுகளே காரணம். ஏனென்றால் தளர்வுகள் அளிக்கப்பட்ட பிறகு ஏராளமான சிறு, குறு தொழில்கள் செயல்படுகின்றன. இதனால் போக்குவரத்து, மின்சார பயன்பாடுகள் போன்றவை மீண்டும்  தொடங்கியுள்ளது.
அதேபோல் பெரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள மகாராஷ்டிரம்,குஜராத் போன்ற மாநிலங்கள் இன்னும் பின்தங்கியே உள்ளது.இதற்குக் காரணம் அங்குத் தளர்வுகள் இன்னும் அளிக்கப்படவில்லை. ஏனென்றால் அங்கு தான் கொரோனா பாதிப்பு அதிகளவு உள்ளது.
இதேபோல் அனைத்து மாநிலங்களும் சற்று தளர்வு அளித்தால் கட்டாயம் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா அனைத்து நாட்டிற்கும் முன்னோடியாக நிச்சயம் விளங்கும்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here