Home செய்திகள் இந்தியா பிளாஸ்மா தானம் செய்தால் அரசு வேலை !

பிளாஸ்மா தானம் செய்தால் அரசு வேலை !

329
0
Share

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 25 ஆயிரம் பேர் கிட்ட உயிரிழந்துள்ளனர். இன்னும் இந்த நோய்க்குத் தடுப்பூசி, மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதற்காக பல்வேறு மருந்து நிறுவனம் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப் போராடி வருகின்றனர். ஆயினும் முதன் முதலில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இடம் பிளாஸ்மா சிகிச்சை முறையினை கையில் எடுத்துள்ளது டெல்லி அரசு.

டெல்லியில் முதல் முதலில் பிளாஸ்மா வங்கியை நிறுவியதை அடுத்து தமிழ்நாட்டிலும் பிளாஸ்மா  வங்கி நிறுவப்பட்டது. தற்போது பல்வேறு மாநில அரசுகள் பிளாஸ்மா சிகிச்சையைக் கையில் எடுத்து வருகின்றனர். இந்த சிகிச்சை மூலம் கொரோனா நோயில் தீவிரமடைந்தவருக்குச் சிகிச்சை அளித்து உயிர் பிழைக்க முடியும் என்று எண்ணுகின்றனர்.

இத்தகைய சூழலில் அசாம் மாநிலத்தில் பிளாஸ்மா தானம் செய்தால் அவர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அம்மாநில  அமைச்சர் ஹிமந்தா பீஷ்மா சர்மா  பத்திரிக்கை நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்:

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 400 கிராம் வரை பிளாஸ்மா தானம் செய்ய முடியும். ஒவ்வொரு நபருக்கும் சிகிச்சையாக்கக் குறைந்தது 400 கிராம் ஆவது தேவைப்படுகிறது. எனவே பிளாஸ்மா தானம் அளிக்க முன்வருவோருக்குச்  சான்றிதழும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றிதழைக் கொண்டு அரசு வேலைக்கு விண்ணப்பித்தால்  முன்னுரிமை வழங்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here