Home முகப்பு உலக செய்திகள் தென் சீனக்கடலில் அடித்து ஆடத் தயாராகும் இந்தியா!.. சீனாவுக்கு ஆப்பு வைக்கும் ‘குவாட்’ திட்டம்!…

தென் சீனக்கடலில் அடித்து ஆடத் தயாராகும் இந்தியா!.. சீனாவுக்கு ஆப்பு வைக்கும் ‘குவாட்’ திட்டம்!…

358
0
India is getting ready to play in the South China Sea
Share

செப்டம்பர் 2007’இல் அப்போதைய யுபிஏ-1 ஆட்சியின் கீழ், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் வங்காள விரிகுடாவில் மலபார் கடற்படை பயிற்சிகளில் பங்கேற்றன. குவாட் எனும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா கூட்டமைப்பு குறித்த கருத்துக்கள் பிறப்பதற்கு முன்பே இது இருந்தது.

ஆனால் சீன கம்யூனிஸ்ட் கட்சி அப்போது இந்த பயிற்சியை கடுமையாக விமர்சனம் செய்ததோடு, சீனாவை குறிவைப்பதற்கான பயிற்சியாக இந்த நடவடிக்கை உள்ளது என குற்றம் சாட்டியது. இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்திய இடதுசாரி கட்சிகள் ஏற்கனவே மன்மோகன் சிங் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், சீன ஆட்சியாளர்களின் கோபத்தை சம்பாதிக்கத் தயாராக இல்லாத நிலையில், கூட்டு கடற்படைப் பயிற்சி குறித்த கருத்து முளையிலேயே கைவிடப்பட்டது.

பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவுடனான லடாக் நில எல்லைகளில் சீன டிராகன் அத்துமீறுவதும், ஜப்பானுடன் சென்காகு தீவுகளில் போட்டியிடுவதும், வர்த்தகப் போரினால் ஆஸ்திரேலியாவை பகிரங்கமாக அச்சுறுத்துவதும், அமெரிக்க கடற்படை மேற்கொள்ளும் ஏவுகணை குறித்து பேசுவதும், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவை மீண்டும் ஒரே புள்ளியில் அமெரிக்காவுடன் இணைக்கின்றன.

குவாட் கடற்படைப் பயிற்சிக்கான அழைப்பு இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், அமெரிக்க கடற்படை தென் சீனக் கடலில் புதிய கடல்சார் கொள்கையைப் பின்பற்றி ஸ்ப்ராட்லி தீவுகளில் தனது நடவடிக்கையை அதிகரித்துள்ளது. அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ரால்ப் ஜான்சனுக்கு உதவியாக யுஎஸ்எஸ் ரொனால் ரீகன் மற்றும் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் தலைமையிலான இரண்டு போர்க்கப்பல்களை தென்சீனக்கடலுக்கு அனுப்பியுள்ளது.

நரேந்திர மோடி அரசாங்கம் ஆசியான் ரிலீஜியன் நாடுகளுக்கு ஆதரவாக, தென்சீனக்கடல் மீதான சீனக் கூற்றுக்களை மறுத்து உலகின் பொதுவான பகுதி என்று அழைப்பதன் மூலம், சீனாவின் கருத்தை நிராகரித்ததுடன், அந்த பகுதியில் தடையின்றி மேற்கொள்ளப்படும் சர்வதேச கப்பல் மற்றும் விமான போக்குவரத்திற்கும் ஆதரவாக பேசியுள்ளது.

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் துறைமுகத்திற்கான வர்த்தகம் தென்சீனக்கடல் வழியாக சென்றாலும், சீன கம்யூனிஸ்ட் அரசுடன் கொண்டுள்ள நெருக்கம் தென்சீனக்கடல் விவகாரத்தில் ரஷ்யாவை மௌனமாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் தென்சீனக்கடல் பிரச்சினை பற்றி இருதரப்பு விவாதங்களை மேற்கொண்டுள்ளன.

இதனால் குவாட் மூலம் தென்சீனக்கடலில் சீனாவின் வல்லாதிக்கத்தை எதிர்க்க இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானை ஆசியான் நாடுகள் துணைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சீனாவின் விரிவாக்கத்தை கட்டுப்படுத்த நினைக்கும் அமெரிக்கா இதை சரியாக பயன்படுத்தி சீனாவை கட்டுப்படுத்த நினைக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here