Home அறிவியல் செவ்வாய் கோளுக்கு விண்கலம் ! 3 வது முறை தள்ளிவைப்பு..

செவ்வாய் கோளுக்கு விண்கலம் ! 3 வது முறை தள்ளிவைப்பு..

413
0
Share

பல்வேறு நாடுகளின் இருந்து செவ்வாய் கோளை ஆராய்ச்சி செய்ய ஏராளமான விண்கலங்களை அனுப்பி வைக்கின்றனர். அந்த வரிசையில் தற்போது UAE அதாவது ஐக்கிய அரபு நாடுகள் தரப்பிலிருந்து ஒரு விண்கலம் உருவாக்கப்பட்டது.

இந்த விண்கலமானது செவ்வாய் கோளின் சுற்றுப் பாதை மற்றும் வளி மண்டலம் ஆகியவற்றை ஆராய்ச்சி செய்யும் என்று தெரிவித்திருந்தனர். இந்த விண்கலத்தை ஜப்பான் நாட்டின் தானேகாஷிமாவில் உள்ள ஓர் விண்வெளி ஆராய்ச்சி மையம் உதவியுடன் செலுத்த ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக ஏற்கனவே இரண்டு முறை விண்ணில் ஏவுவதற்குத் தேதியை அறிவித்து இருந்தனர்.

ஆனால் அந்த இரண்டு தேதிகளும் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஜப்பானின் காலநிலை மோசமாக இருப்பதால், வானிலையைக் கருத்தில் கொண்டு மீண்டும் நிறுத்தி வைத்துள்ளது. எனவே வரும் 22ஆம் தேதி ஏவப்படும் என்று ஐக்கிய அரபு நாடுகள் தெரிவித்துள்ளது. இந்த முறையாவது முறையாகச் செலுத்தப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது என்று அவர்களுக்குள் பேசி வருகின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here