Home செய்திகள் கொரோனா குடிமகன்களுக்கு அதிர்ச்சி தந்த தமிழக அரசு…

குடிமகன்களுக்கு அதிர்ச்சி தந்த தமிழக அரசு…

432
0
tasmac closed
Share

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் முதல் பல கட்டங்களாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதையும் தாண்டி தற்போது ஆகஸ்ட் மாதம் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு உள்ளதாக நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இந்த முடிவை மருத்துவ குழுவினரின் ஆலோசனைக்கு பிறகே மேற்கொண்டார்.

அப்போது ஞாயிற்றுக்கிழமை முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மற்ற நாட்களில் தளர்வுகள் படி வெளியில் வரலாம் என்றும் தெரிவித்திருந்தார். இந்த முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் போது எந்த ஒரு கடைகளையும் திறக்கக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

இதனால் குடிமகன்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனென்றால் ஆகஸ்ட் மாதம் மொத்தம் 5 ஞாயிற்றுக் கிழமைகள் வருகிறது. இந்த ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் டாஸ்மாக் கடைகள் முழுவதும் மூடப்படும் எனவே குடிமகன்கள் இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

கொரோனா பரவல் தற்போது தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். அதே போல் இன்றைய கொரோனா பாதிப்பு இவ்வளவு நாட்களைக் காட்டிலும் இன்று எண்ணிக்கை சற்று குறைவாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here