Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் எந்த வயதிலும் இளமையாக இருக்க சில எளிய வழிமுறைகள்…

எந்த வயதிலும் இளமையாக இருக்க சில எளிய வழிமுறைகள்…

48
0
papaya skin mask
Share

பொதுவாகவே நாம் இளமையாக இருக்கத் தான் விரும்புவோம். அது போல் யாராவது நம்மை என்ன இவ்வளவு இளமையை இருக்கீங்கன்னு கேட்டால் போதும் அன்று முழுவதும் நாம் மகிழ்ச்சியாக இருப்போம். அப்படி நம் சருமத்தை இளமையாகவும் பொலிவுடனும் வைத்துக் கொள்ளத் தேவையான எண்ணெய் வகைகளையும் சில எளிய வழிமுறைகளையும் இப்போது காண்போம்…

ரோஜா எண்ணெய் : ரோஜா எண்ணெய்யைக் கொண்டு தினமும் தூங்கும் முன்பு நன்கு மசாஜ் செய்து பாருங்கள். இதில் ஏராளமான ஆண்டி பாக்டீரியல், ஆண்டி ஆக்ஸிடண்ட் போன்றவை இருக்கிறது. இதனால் உங்கள் சருமம் எந்த வித தொற்றும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும். அதே நேரம் கொலாஜின் எனப்படும் சரும அடுக்குகளும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

சந்தன எண்ணெய் : சந்தன எண்ணெய்யில் உள்ள வாசமே மனதிற்குப் புத்துணர்ச்சியையும் அமைதியையும் , நல் உணர்வை அளிக்கும். சருமத்தில் இந்த எண்ணெய் கொண்டு தொடர்ந்து மசாஜ் செய்வதால் ஆரோக்கியமான தோற்றத்தை அளிக்கும் என Aesthetic Dermatology என்ற இதழில் வெளியான ஆய்வு முடிவு கூறுகிறது.

பிராங்கின்சென்ஸ் எண்ணெய் : இந்த எண்ணெய்யின் நறுமணம் ஆளையே மயக்கும் அளவிற்கு இருக்கும். அதே நேரம் சருமத்தைப் பராமரிக்கவும், ஆரோக்கியமாக்கவும் பெரும் ஆற்றலைக் கொண்டுள்ளது


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here