Home செய்திகள் இந்தியா சென்செக்ஸ் 600 புள்ளிகள் வீழ்ச்சி – நிப்டி 4 நாட்களில் 600 புள்ளிகள் சரிந்து 11...

சென்செக்ஸ் 600 புள்ளிகள் வீழ்ச்சி – நிப்டி 4 நாட்களில் 600 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்திற்கு கீழ் சென்றது

428
0
Share

உலக பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. தேசிய பங்கு சந்தையான நிப்டி 11 ஆயிரத்திற்கு கீழ் சென்றது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 538.02 புள்ளிகள் சரிந்து 37,130.40ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 161.20 புள்ளிகள் சரிந்து 10,970.65ஆகவும் வர்த்தகமாகின. காலை 12.15 மணியளவில் சென்செக்ஸ் 756 புள்ளிகளும், நிப்டி 222 புள்ளிகளும் சரிந்து வர்த்தகமாகின. இன்றைய சந்தை வர்த்தகத்தில் ஒரு சில நிறுவன பங்குகளை தவிர்த்து ஏராளமான நிறுவன பங்குகள் கடும் சரிவை சந்தித்தது.Sensex

அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்தாகவும், வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு போன்ற போன்ற பிரச்னைகள் நிலவுவதாலும், அதனை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை தேவை அந்நாட்டின் பெடரல் வங்கி தொடர்ந்து எச்சரித்தது.

இதன் எதிரொலியாக அந்நாட்டு பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தது. அது மட்டுமல்லாமல் ஆசிய பங்குச்சந்தைகளிலும் இந்த பாதிப்பு எதிரொலித்தது. ஜப்பான், ஹாங்காங், ஐரோப்பா உள்ளிட்ட அநேக நாடுகளின் பங்குச்சந்தைகள் சரிவு பிரதிபலித்தது. மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டதாலும் இந்திய பங்குச்சந்தைகள்ஏராளமான நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்தன.

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 26 காசுகள் சரிந்து ரூ.73.82ஆக வர்த்தகமானது.

இதே போல் தங்கம் மற்றும் வெள்ளியிலும் தொடக்கம் முதல் பெரும் சரிவை சந்தித்தது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here