Home செய்திகள் இந்தியா திருப்பதியில் மீண்டும் முழு ஊரடங்கு…

திருப்பதியில் மீண்டும் முழு ஊரடங்கு…

322
0
Tirupati
Share

திருப்பதியில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் ஆகஸ்ட் 5 வரை ஊரடங்கு பிறப்பித்துள்ளது சித்தூர் மாவட்ட நிர்வாகம்.

கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து ஜூன் மாதம் முதல் பல்வேறு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வந்தது. ஆயினும் ஊரடங்கு தளர்வுகளில் கோவில்கள் திறக்க அனுமதி அளித்ததைத் தொடர்ந்து. பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டது.

அதனால் தற்போது திருப்பதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள அர்ச்சகர்கள், மடப்பள்ளி ஊழியர்கள், தேவஸ்தான ஊழியர்கள், முக்கிய .ஜீயர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் தலைமை அர்ச்சகர் ஒருவர் இந்த கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது திருப்பதி தேவஸ்தானத்தில் ஏற்பட்டுள்ள முதல் உயிரிழப்பாகக் கருதப்படுகிறது. எனவே திருப்பதியில் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது சித்தூர் மாவட்ட நிர்வாகம்.

இது தொடர்பாக சித்தூர் மாவட்ட கலெக்டர் நாராயண பரத் குப்தா தெரிவித்திருப்பதாவது :

சித்தூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் உயிரிழப்பும் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதனால் சித்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் திருப்பதியில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளார். எனவே திருப்பதியில் ஆகஸ்ட் 5 வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 6 மணி முதல் 11 மணி வரை மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளும் இயங்கும். 11 மணிக்கு மேல் யாரும் வெளியில் நடமாடக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தேவஸ்தான அறங்காவலர் குழு, முன்னாள் உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி, ஆந்திர முதல்வர் ஜெகனுக்கு நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில், ஆந்திர அரசு, திருப்பதி ஏழுமலையான் தரிசன அனுமதியைத் தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் எனக் கடிதம் எழுதியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here