Home சினிமா விமர்சனம் கோலிவுட் குழாயடிச் சண்டைக்கே சவால் விடும் தமிழ் நடிகைகள் !

குழாயடிச் சண்டைக்கே சவால் விடும் தமிழ் நடிகைகள் !

615
0
vanitha
Share

நாடே கொரோனா வைரஸ் காரணமாக அச்சத்தில் மூழ்கியுள்ளது. இது ஒரு புறமிருக்க நடிகைகள் ஒரு சிலர் குழாயடி சண்டையை விஞ்சும் அளவிற்கு ஆன்லைனில் சண்டையிட்டு உள்ளனர். இந்த சம்பவம் தான் தற்போது டிரெண்ட் ஆகியுள்ளது.

பிக் பாஸ் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர் பால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். நடிகை வனிதாவிற்கு இது மூன்றாவது திருமணம் ஆகும். இது தொடர்பாக பீட்டர் பாலின் முதலாவது மனைவி அவர் மீது புகார் அளித்துள்ளார். இதற்கு வனிதா பதிலடியும் தந்துள்ளார்.

இந்த விஷயம் தான் சில வாரங்களாக இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இப்படி இருக்க வனிதாவைச் சாடும் வகையில் அவர் திருமணம் குறித்து சில யூடியூப் சேனல்களுக்கு கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் பேட்டி அளித்துள்ளனர்.

இதனால் செம கடுப்பான வனிதா இவர்கள் இருவருக்கும் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளார். இனியும் என் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை பற்றி அவதூறாகப் பேசினால் உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி ஆதாரத்துடன் சமுதாயத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டும் வகையில் எச்சரித்துள்ளார். இதனால் மூவரும் இணையத்தில் சண்டையிட்டு வருகின்றனர்.

தற்போது சில தினங்களுக்கு முன்பு ஒரு யூடியூப் சேனல் வனிதாவையும் லட்சுமி ராமகிருஷ்ணனையும் இணையம் வாயிலாக இணைத்துப் பேச வைத்துள்ளனர். அதில் இரு தரப்பினரும் ஆபாசமான வார்த்தைகளைச் சொல்லித் திட்டி உள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை குழாயடி சண்டை சவால்விடும் அளவிலிருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here