Home செய்திகள் இந்தியா பெரும் சரிவில் facebook நிறுவனம்..

பெரும் சரிவில் facebook நிறுவனம்..

294
0
Share

7.2 பில்லியின் டாலர் விளம்பரங்கள் கையை விட்டுப் போனதால் facebook நிறுவனம் கடும் சரிவைச்  சந்தித்துள்ளது.
பங்குச் சந்தையிலும் facebook பங்குகள் பெரும் சரிவைக் கண்டது. உலக பணக்காரர் பட்டியலில் facebook நிறுவனர் மார்க் சக்கர்பர்க் சற்று பின்னடைந்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் facebook தான் மிகப்பெரிய சந்தையைப் பிடித்துள்ளது. உலகம் முழுவதும் facebook வாயிலாக ஏராளமானோர் தங்கள் நட்பு வட்டத்தைத் தொடர்ந்து விரிவு செய்து வருகின்றனர். facebook அக்கௌன்ட் இல்லாமல் யாரையும் காண முடியாது.
markஅப்படி இருக்க அந்த நிறுவனத்தின் நிறுவர் மார்க் சக்கர்பர்க் ஏராளமான விளம்பரங்களை தம் வசம் வைத்திருந்தார். ஆனால் சில தினங்களுக்கு முன் வெளியான  பிளூம்பர்க் இதழின் உலக பணக்காரர் பட்டியலில் மார்க் சக்கர்பர்க் சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார் என்றும். தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு சிறிது குறைந்து 82.3 பில்லியின் டாலராக உள்ளது என்றும் தெரிவித்திருந்தது.
இதனால் லூயிஸ் பூட்டான் பாஸ் பெர்னார்டு என்பவர் மார்க் சக்கர்பெர்க்-ஐ உலக பணக்காரர் பட்டியலில் நான்காம் இடத்திற்குத் தள்ளி, மூன்றாம் இடத்துக்கு முன்னேறினார் என்றும் குறிப்பிட்டிருந்தது. அது மட்டுமின்றி facebook பங்குகள் தொடர்ந்து 3 மாதங்களாகச் சரிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்திற்கும் காரணம் கோககோலா மற்றும் வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனங்கள் தங்கள் 7.2 பில்லியின் விளம்பரத்தை நிறுத்தியதே. கொரோனா ஊரடங்கு காரணமாகத் தனது சமூக வலைத்தளம் மற்றும் டிஜிட்டல் விளம்பரங்களை கோககோலா  30 நாட்களுக்கு நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதே போன்று ஏராளமான வதந்திகள் facebook-ல் அதிகளவு வருவதால்  வெரிசான் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பேஸ்புக்கில் விளம்பரம் தருவதை நிறுத்திவிட்டது அந்நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு மார்க் சக்கர்பெர்க் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்  கூறியிருப்பதாவது :
1. போலி செய்திகள், மிரட்டல்கள், தவறான தகவல்கள் ஆகியவை முழுமையாக கண்காணிக்கப்படும்  என உறுதியளித்தார்.
2.fake id கள் மூலம் பரப்பப்படும் போலி செய்திகள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர்களால் ஏற்படும் தவறான பதிவுகளுக்கும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
3.அது மட்டுமின்றி எந்த ஒரு அரசியல் தலைவர்களுக்கும் facebook அறிவித்துள்ள கட்டுப்பாட்டிற்குள் மட்டுமே பதிவிடமுடியும் என்று அறிவித்துள்ளார். இதுவரை அளித்த தளர்வுகள் நிறுத்தப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here