Home சினிமா விமர்சனம் கோலிவுட் அறம் 2 கீர்த்தி சுரேசா? சமந்தாவா ?

அறம் 2 கீர்த்தி சுரேசா? சமந்தாவா ?

499
0
aaram 2
Share

தமிழ் சினிமாவில் 2017 ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் உருவான படம் தான் அறம். இந்த படத்தில் நடிகை நயன்தாரா வெயிட்டான கலெக்டராக நடித்திருப்பார் இந்த படத்தைக் கோபி நயினார் இயக்கியிருந்தார்.
இந்த படம் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. வசூல் ரீதியாகவும் மக்கள் மனதளவிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை ஈட்டியது.
இதை அடுத்து இந்த படத்தின் கிளைமாக்ஸில் தன் கலெக்டர் பதவியைப் பறிக்கும் வகையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருக்கும். அதற்கு நயன்தாராவும் இதைவிட உயர்ந்த பதவிக்கு வந்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுப் படத்தை முடித்திருப்பார்.
இதனால் அறம் 2 எப்படியும் இருக்கும் என்று அப்போதே முடிவாகிவிட்டது. ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் படம் OTT தளத்தில் ரிலீசாகி கலவையான விமர்சனத்தையும் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து இவர் தான் அறம் 2வில் நடிக்கப்போகிறார் என்ற ஒரு வதந்தியும் வைரல் ஆகி விட்டது. அதே போன்று சமந்தாவின் பெயரும் அடிபட்டது.
இது பற்றி இயக்குநர் கோபி நயினார் விளக்கமளித்துள்ளார்:
அறம் 2 நயன்தாராவைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது. எனக்கும் வேறு யாரையும் நடிக்க வைக்கும் எண்ணமும் கிடையாது என்று உறுதிப்படுத்தியுள்ளார். அறம் படத்தை விட அறம் 2 மிகவும் அழுத்தமாக ஆழமாகக் கதை அம்சம் கொண்ட ஒரு படமாக இருக்கும். எனவே நயன்தாரா தான் இதற்குச் சரியாக இருப்பார் என்று வந்த வதந்திகளுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here