Home செய்திகள் இந்தியா BIGG BOSS 4 ! தொடங்கும் தேதி அறிவிப்பு…

BIGG BOSS 4 ! தொடங்கும் தேதி அறிவிப்பு…

449
0
Big boss 4
Share

தமிழ் தொலைக்காட்சிகளில் அனைவரும் அறியப்படும் விதத்தில் நாடகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுவிடும். அதைத் தவிர்த்து ஒரு சில சேனல்களில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றுவிடும்.
அதில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் விஜய் டி.வி ஏராளமான நிகழ்ச்சிகளை நடத்தும். அதில் ஒரு சில நிகழ்ச்சிகள் நல்ல ஹிட் ஆகி விடும். அதைத் தவிர்த்து ஒரு சில நாடகங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதில் ஒன்று தான் இந்த BIGG BOSS. இந்த நிகழ்ச்சி 16 பேரை 1 வீட்டினுள் 100 நாட்களுக்குத் தங்க வைத்து அவர்களுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடு ஆகியவற்றை எல்லாம் வெளிப்படையாகக் காண்பிக்கும் ஒரு ரியாலிட்டி ஷோ ஆகும். இது பாலிவுட்டில் இருந்து தழுவப் பட்டதே.
இந்த நிகழ்ச்சி 2017-ல் தமிழ் நாட்டில் தொடங்கியது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் – ஜூலை மாதத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும்.  இதுவரை 3 சீசன் முடிந்துள்ளது.  இந்தாண்டும் 4வது சீசன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் நாடக படப்பிடிப்பே எடுக்க முடியாத நிலையில் எங்கிருந்து இந்த ஷோவை ஷூட் செய்வது என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டது.
அது மட்டுமின்றி BIGG BOSS என்றால் உலக நாயகன் கமல் தான் அனைவர்க்கும் முதலில் ஞாபகம் வரும் ஏனென்றால் அவர் தான் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்.
ஆனால் சமூக வலைத்தளங்களில் BIGG BOSS நிகழ்ச்சியைக் கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்று வதந்தி பரவி வந்தது.
இந்த ஆண்டு பிக்பாஸ் இருக்குமா இருக்காதா என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில்  BIGG BOSS நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான எண்டிமால் நிறுவனம் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூலையில் 4வது சீசன் ஒளிபரப்பு தொடங்கிடவிடலாம் என்று நினைத்தோம். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா சூழலுக்கு அது நடக்காது.
எனவே கொரோனா லாக்டவுன் ஆகஸ்ட்டுக்குள் முடிவுக்கு வந்து விடும் என நம்புகிறோம். செப்டம்பரில் மீண்டும் BIGG BOSS ஒளிபரப்பைத் தொடங்கலாம் என்று முடிவெடுத்துள்ளோம்.
எனவே விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் என்றும் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை நிச்சயம் கமல் சார் தான் தொகுத்து வழங்குவார் என்று வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளனர்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here