Home லைஃப் ஸ்டைல் ஆரோக்கியம் இ-சஞ்சீவனி இணையதளம் வழியாக வீட்டிற்கே வரும் டாக்டர்கள்!…

இ-சஞ்சீவனி இணையதளம் வழியாக வீட்டிற்கே வரும் டாக்டர்கள்!…

875
0
E-Sanjeevani OPD
Share

கொரோனா ஊரடங்கில் சாதாரண உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை செல்ல முடியாத சூழலில் இணையதளம் வழியாக வீட்டிற்கே வரும் டாக்டர்கள் இலவச ஆலோசனை வழங்கி மருந்து சீட்டும் தருகிறார்கள்.

கொரோனாவை ஒழிக்க மத்திய அரசு பல இணையம், செயலிகளை மக்களுக்காக வழங்கி வருகிறது. அதில் அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக ‘ஆரோக்கிய சேது’ இருக்கும் நிலையில் 2009ல் அரசால் துவங்கப்பட்ட ‘இ-சஞ்சீவனி நேஷனல் டெலிகன்சல்டேஷன் சர்வீஸ்‘ இன்று மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

பேஷன்ட் ரிஜிஸ்ட்ரேஷன்

இ-சஞ்சீவனி இணையதளம் அல்லது ஆப் திறந்தவுடன் பேஷன்ட் ரிஜிஸ்ட்ரேஷன், பேஷன்ட் லாகின், டாக்டர் லாகின் என பட்டன்கள் இருக்கும். புதிதாக பதிவு செய்வோர் பேஷன்ட் ரிஜிஸ்ட்ரேஷன் பாக்ஸில் மொபைல் எண் கொடுத்த பின் வரும் OTP ,யை பதிவு செய்ய வேண்டும். பெயர், முகவரி, மாநிலம், ஊர் போன்ற விபரங்களை கொடுத்த பின் வசிக்கும் பகுதியை தேர்வு செய்ய வேண்டும். ஜெரனல் அவுட் பேஷன்ட் (ஒ.பி.டி) அல்லது ஸ்பெஷாலிட்டி ஒ.பி.டி.,யை கிளிக் செய்து ஏற்கனவே நம் டாக்டரிடம் பெற்ற ‘ஹெல்த் ரெகார்டை’ பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ரிஜிஸ்ட்ரேஷன் முடிந்த பின், டாக்டரை சந்திக்கும் ஐ.டி. டோக்கன் ஜெனரேட் செய்ய வேண்டும். நோட்டிபிகேஷன் வந்ததும் லாகின் செய்து காத்திருக்க வேண்டும். டோக்கன் எண் வரிசை வரும் போது டாக்டர் வீடியோ மூலம் நம்முடன் இணைவார். அவரிடம் நம் உடல்நிலை உட்பட குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை குறித்து ஆலோசனை பெறலாம். பின் மருந்து, மாத்திரைக்கான சீட்டை டாக்டர் ஜெனரேட் செய்வார். இ-பிரிஸ்கிரிப்ஷன் பிரிவில் சீட்டை பதிவிறக்கம் செய்து மருந்துக்கடையில் மருந்து, மாத்திரை வாங்கி சாப்பிட்டு நலமாகலாம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here