Home செய்திகள் இந்தியா திருப்பூர் பட்டதாரிகள் கண்டுபிடித்த tiktok மாற்றுச் செயலி …

திருப்பூர் பட்டதாரிகள் கண்டுபிடித்த tiktok மாற்றுச் செயலி …

577
0
Share

இந்தியா – சீனா எல்லை பிரச்சனை காரணமாகச் சீன பொருட்கள் புறக்கணிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து மத்திய அரசு சீனாவுடன் தொடர்புடைய 59 சீன மொபைல் ஆப்களை பயன்படுத்த இந்தியாவில் தடை உத்தரவிட்டிருந்தது.

இதன் காரணமாக மிகவும் பிரபலமான tiktok,shareit,UC browser போன்ற ஆப்களுக்கு தடை செய்யப்பட்டன. அதனால் இந்த ஆப்கள் அனைத்தும் தற்போது இந்தியாவில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அதிலும் tiktok ஆப்ற்க்கு இந்தியாவில் அதிகளவு பயனர்கள் இருந்தனர்.

தற்போது பொழுதுபோக்கிற்கு வேற ஆப்களை தேடுகின்றனர். அதற்குப் போட்டியாக பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏராளமான ஆப்களை  உருவாக்கி வருகின்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் tiktok போன்றே ஆப் ஒன்றைத் தயாரித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிஷ்குமார், சௌந்தரகுமார், சந்தீப், கோகுல், வெங்கடேஷ் 5 பட்டதாரி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த ஆப்பை தயாரித்துள்ளனர் இந்த ஆப்பிற்கு chill5 என்று பெயரிட்டுள்ளனர். இது பார்க்க முழுவதும் tiktok போன்றே பதிவிறக்கம், பதிவேற்றம் என அனைத்து அம்சங்களையும் கொண்டு உருவாக்கியுள்ளனர். இந்த ஆப்பை  மேம்படுத்தப் பயனர்கள் அளிக்கும் புகார்களை உடனடியாக சரி செய்ய முயல்கின்றனர். இந்த ஆப் வெளியிட்டு ஒரு வாரம் ஆகிறது. இதுவரை 1k -விற்கும்  அதிகமானோர் இந்த ஆப்பை டவுன்லோட் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

அதே போல் இந்த ஆப் குறித்த சர்வர் தகவல்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க முழு முயற்சி மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். ஏனென்றால் ஏற்கனவே இது போன்ற ஆப்பில் தகவல் திருட்டு ஏற்படுவதாக கருதித்தான் தடை விதித்திருந்தனர். அதை இந்த chill5 ஆப் எதிர்கொள்ளக் கூடாது என்று பாதுகாப்பு விஷயத்தில் முழு நோக்கில் உள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here