Home செய்திகள் இந்தியா மாஸ்டர் பட இயக்குநரின் அடுத்த படம் என்ன தெரியுமா ?

மாஸ்டர் பட இயக்குநரின் அடுத்த படம் என்ன தெரியுமா ?

435
0
Share

பிரபல இளம் இயக்குநரான லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கி அந்த படம் வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது. தற்போது அடுத்து இயக்கம் உள்ள படத்தைக் குறித்து நாளை அறிவிக்கிறார்.

மாநகரம், கைதி என ஹிட் படங்களைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ், முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. கொரோனா பரவல் காரணமாகவும் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கில் தொடர்ந்து இந்த படம் முடங்கியுள்ளது.

ஆனால் இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் அதில் ரஜினி நடிக்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. அது மட்டுமில்லாமல் ரஜினிகாந்தின் கடைசி திரைப்படமாக இது இருக்கும் என்றும் தொடர்ச்சியாகச் செய்திகள் வெளி வந்தது. இதே போல் தொடர்ந்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாகியது.

90’s கிட்ஸ் அனுப்பிய மனுவைக் கவனிப்பாரா நித்தியானந்தா !

தற்போது இவரே இவருடைய டிவிட்டர் பக்கத்தில் நாளை அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here