Home செய்திகள் இந்தியா மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தது என்ன தெரியுமா ? அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் !

மொபைல் போன் ஆர்டர் செய்தவருக்கு வந்தது என்ன தெரியுமா ? அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் !

350
0
Share

சென்னையை அடுத்த ஒட்டியம் பாக்கம் ஊராட்சி அரசன்கழனி வேடந்தாங்கல் பகுதியில் முகமது அலி பள்ளியில் படித்து வரும் மகளுக்கு ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் வாங்கிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 ந் தேதி பேஸ்புக்கில் ரூ.1,12,000 மதிப்புள்ள செல்போனை ரூ.2,999 – க்கு வழங்குவதாக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. COD எனப்படும் செல்போன் டெலிவரிக்கு பிறகு பணம் கொடுத்தால் போதும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஆன்லைனில் செல்போனை முகமது அலி ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில், ஆர்டர் செய்த 6 நாள்களுக்குப் பிறகு சரவணன் என்பவர் செல்போனை டெலிவரி செய்ய வந்துள்ளார். அவரிடத்தில் பணத்தை கொடுத்து விட்டு பார்சலை வாங்கியுள்ளார். முகமது அலிக்கு சிறிது சந்தேகம் ஏற்பட்டதால், சரவணன் கண் முன்பே பார்சலை பிரித்தார். டெலிவரி செய்வது மட்டும்தான் என் வேலை உள்ளே இருக்கும் பொருள் பற்றி எங்களுக்குத் தெரியாது என்று சரவணன் கூறியுள்ளார்.

பத்தாயிரத்தில் பட்டையைக் கிளப்பும் POCO M2..

பார்சலில் சீட்டுக்கட்டுக்ள் இருப்பதை பார்த்த முகமது அலி கடும் கோபத்தில் சத்தம் போடவே, அக்கம்பக்கத்தில் இருந்தவர் கூடி சரவணனை பிடித்தனர். பின்னர், பார்சலை பிரித்துப் பார்த்தால் உள்ளே, செல்போனுக்கு பதிலாக இரண்டு சீட்டுக்கட்டுகள் மட்டுமே இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த முகமது அலி மற்றும் பொதுமக்கள் சரவணனுக்குத் தர்ம அடி கொடுத்துள்ளனர். அங்கிருந்து தப்பிய சரவணன் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்துக்கு வந்து புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து , காவல்துறையினர் முகமது அலியை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் முகமது அலி நடந்ததைக் கூறினார். சரவணனிடத்தில் விசாரித்த போது, ‘தங்களுக்கு வந்த பார்சலை டெலிவரி செய்வது மட்டுமே எங்கள் வேலை’ என்று தெரிவித்துள்ளார். டோர் டெலிவரியின் போது பணம் வழங்கலாம் என்று சொல்லப்பட்ட நிலையில் சரவணன் வேலை பார்த்த நிறுவனத்தின் விலாசம், போன் எண், செல்போன் எண்களை வாங்கி விட்டு போலீசார் அவரை விடுவித்துள்ளனர். ஆன்லைன் வழியாக இது போன்ற மோசடியில் மிகப் பெரிய நெட்வொர்க் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். தற்போது மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சதுரங்க வேட்டை பட பாணியில் இதுபோன்ற குற்றங்கள் தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது. இதற்குச் சமூகவலைத்தளங்களை இந்த கும்பல் பயன்படுத்தி வருகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here