Home ஆன்மீகம் ஐந்து முக ருத்ராட்சம் பற்றித் தெரியுமா ?

ஐந்து முக ருத்ராட்சம் பற்றித் தெரியுமா ?

2394
0
Share

சிவபெருமானை விரும்பி அணிவது தான் இந்த ருத்ராட்சம். எனவே சிறிய மணி போன்று ஒழுங்கற்ற முறையில் இருக்கும் இதில் அழுத்தமான கோடுகள் இருக்கும். இந்த கோடுகளையே முகம் என்றே கணக்கிடப்படுகிறது. இந்தக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டு ஐந்து முகம், ஆறு முகம் என்று அழைக்கப்படுகிறது.

ருத்ராட்சம் அணிவதற்கு இன வேறுபாடு, மத வேறுபாடு என ஏதும் தேவை இல்லை. யார் வேண்டுமானாலும் அணியலாம். ருத்ரன் என்பது சிவபெருமானின் ஒரு பெயராகும். அவரின் நெற்றியிலிருந்து தோன்றியதே இந்த ருத்ராட்சை. இந்த ருத்ராட்சை கோடுகளைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது.

அதாவது 1 முகம் முதல் 21 முகம் ருத்ராட்சம் இருப்பதாகக் கூறுகின்றனர். இந்த 21 முகம் வரை உள்ள ருத்ராட்சையின் 14 முகம் வரை மட்டுமே சாமானிய மனிதர்கள் அணிய வேண்டுமாம், அதைத் தவிர்த்து அதற்கு மேலுள்ள அனைத்தும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்களும், இறை மூர்த்திகளும், ஞானிகளும்  மட்டுமே அணியவேண்டும். இந்த ருத்ராட்சை என்பது ஒரு மரத்தில் உள்ள காய்கள். இதில் 50 சதவீதத்திற்கும் மேல் ஐந்து முக ருத்ராட்சம் தான் கிடைக்கும்.

இதில் என்ன எல்லாம் சிறப்பு உள்ளது தெரியுமா :
இது சிவபெருமானது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்றாக மக்கள் நம்புகின்றனர்.

சிவபெருமானைப் பக்தியோடு வணங்கி இந்த ருத்ராட்சை அணிகின்றனர். இந்த ருத்ராட்சத்தைப்  பயபக்தியோடு அணிவதால் இது அணிபவர்களின் பாவத்தைப் போக்குவதாக நம்புகின்றனர்.

அது மட்டுமல்லாமல் நவகிரகத்தில் உள்ள குரு பகவானின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ருத்ராட்சம் தேவகுரு என அழைக்கப்படுகிறது.அதாவது தேவர்களுக்கு  எல்லாம் தேவர் ஆம்.

மேலும் ஒரு சிலர் இந்த ருத்ராட்சம் தம் கோபத்தைக் கட்டுப்படுவதாக நம்புகின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here