Home அறிவியல் கொரோனவால் மகிழ்ச்சியடைந்த விஞ்ஞானிகள்…

கொரோனவால் மகிழ்ச்சியடைந்த விஞ்ஞானிகள்…

373
0
scale
Share

இந்த கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் பல்வேறு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் நோயால் பாதிக்கப்பட்டனர், மேலும் ஒரு சிலர் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டனர். ஆனால் விஞ்ஞானிகளோ சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏனென்றால் கொரோனா பரவல் காரணத்தினால்  பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதற்கு மிகவும் எளிதாக இருப்பதாக எண்ணுகின்றனர். காற்றில் எந்த ஒரு மாசும் இன்றி சுத்தமாக உள்ளது, புகைமூட்டம் இல்லாமல் காணப்படுகிறது, எனச் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் நிலநடுக்க ஆராய்ச்சியாளர்கள் ஒப்பற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால் சாதாரண நாட்களில் நடத்தப்படும் கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுப் போட்டிகள் ரசிகர்களின் ஆரவாரத்தால் நிலநடுக்கம் ஏற்படுவது போல் நில அதிர்வு மாணிகள் பதிவுசெய்யும்.

ஆம் இந்த ஊரடங்கு காரணத்தினால் இப்படிப்பட்ட பதிவுகள் ஏதும் இல்லாமல் நிம்மதியாக உள்ளனராம். கொரோனா பரவலுக்கு முன்பு மனிதர்களால் ஏற்படும் நில அதிர்வு அதிகமாக இருந்தது. நில அதிர்வால் மனிதனால் ஏற்படும் அதிர்வா என்று அவர்கள் எப்போதும் கண்டறிய வேண்டி இருந்தது. ஆனால் தற்போது இந்த மாதிரியான அதிர்வு குறைந்திருக்கிறது என்று கருதுகின்றனர்.

அது மட்டுமில்லாமல் தொலைதூரத்தில் சிறிது அதிர்வு ஏற்பட்டாலும் கச்சிதமாகக் கண்டறிய முடிகிறதாம். இது வரை நிலநடுக்கம் பதிவு செய்யாத இடங்களில் கூட தற்போது சிறிதளவு ஏற்பட்டுள்ளதாகப் பதிவு செய்துள்ளார்களாம்.அந்த அளவிற்குச் சிறிய அதிர்வுகளையும் துல்லியமாகக் கண்டிக்கிறதாம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here