Home ஆன்மீகம் ஐப்பசி மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதியில்லை ! சபரிமலை தேவஸ்தானம் முடிவு..

ஐப்பசி மாத பூஜைக்கு பக்தர்கள் அனுமதியில்லை ! சபரிமலை தேவஸ்தானம் முடிவு..

481
0
Share

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாதம் பூஜைக்கு பக்தர்களை அனுமதிக்கலாம் என்று தேவசம் போர்டு அறிவித்து இருந்தது. ஆனால் சுகாதாரத் துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த பூஜைக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இருப்பினும் வரும் கார்த்திகை மாதம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்பதற்காக ஆன்லைன் முன்பதிவு மூலம் தொடங்கலாம் என்று ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனையில் ஒரு முன்னோட்டமாக ஐப்பசி மாத பூஜை மிக குறைந்த அளவு பக்தர்களை அனுமதிக்கலாம் என்று தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பூஜை அக்டோபர் 16ஆம் தேதி தொடங்க உள்ளது அதனால் பக்தர்கள் அதிகம் வர நேரிடும் கொரோனா நோய் தொற்று பரவி விடும் அபாயம் இருக்கும் என்று சுகாதாரத்துறை தெரிவித்ததை அடுத்து பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமாக பரவ தொடங்கியது. இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்கு பக்தர்கள் வந்தால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியாது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் இந்தியாவில் அறிமுகம் !

இது தொடர்பாக தேவசம் போர்டு தலைவர் வாசன் கூறியிருப்பதாவது :
மண்டல பூஜைக்காக பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான முடிவை எடுக்க நடந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னோட்டமாக ஐப்பசி மாத பூஜை குறிப்பிட்ட அளவு மக்கள் வரை அனுமதிக்கலாம் என்று முடிவெடுத்தோம். ஆனால் சுகாதாரத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளாவில் தொடர்ந்து கொரோனா நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாலும் இந்த முடிவை நாங்கள் வாபஸ் பெற்று விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here