Home செய்திகள் இந்தியா பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் இந்தியாவில் அறிமுகம் !

பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் இந்தியாவில் அறிமுகம் !

378
0
Share

பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் சேவை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இது டிஜிட்டல் பேமன்ட்ஸ் செயலியினுள் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக பேடிஎம் நிறுவனம் தேசிய ஆப் ஸ்டோர் ஒன்றை வெளியிடுவதற்கு இந்திய டெவலப்பர்களுடன் இணைந்து கோரிக்கை விடுத்து இருந்தது. இதைத் தொடர்ந்து புதிய மினி ஆப் ஸ்டோர் துவங்கப்பட்டு இருக்கிறது.

ஸ்மார்ட்போன் செயலிகள் மற்றும் டெவலப்பர் டூல்களை வெளியிடுவதற்கு மாற்றாக பேடிஎம், ப்ரோகிரசிவ் வெப் ஆப் (PWA) வழங்கியுள்ளது. இவை பிரவுசர்களில் இயங்கும் லைட் ஆப்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகளை இன்ஸ்டால் செய்யாமல் இயக்க முடியுமாம். ஆனால் தற்போது மினி ஆப் ஸ்டோரில் சில செயலிகள் மட்டுமே பட்டியலிடப்பட்டு இருக்கின்றது.

உலகத்தில் 10% பேருக்கு கொரோனா பாதிப்பு -உலக சுகாதார அமைப்பு

இந்த புதிய பேடிஎம் மினி ஆப் ஸ்டோர் இந்தியாவை சேர்ந்த சிறு டெவலப்பர்கள் மற்றும் வியாபாரங்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது என பேடிஎம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆப் ஸ்டோரில் குறைந்த செலவில், ஹெச்டிஎம்எல் மற்றும் ஜாவா ஸ்க்ரிப்ட் வாயிலாக செயலிகளை உருவாக்கி பதிவேற்றம் செய்ய முடியும் என்று சொல்லப்படுகிறது. இதில் உள்ள செயலிகள் பேடிஎம் செயலியினுள் திறக்கும். இதில் செயலிகளை பட்டியலிட எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என பேடிஎம் தெரிவித்து இருக்கிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here