Home முகப்பு உலக செய்திகள் பூமியின் சூட்டை தனித்த கொரோனா வைரஸ்?..

பூமியின் சூட்டை தனித்த கொரோனா வைரஸ்?..

346
0
Corona virus isolated from Earth's heat
Share

கோவிட்- 19 தாக்குதலால், எல்லா நாடுகளிலும் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்து, புகை மாசு மிகவும் அருகியிருக்கிறது. இதனால், காற்றில் கரியமில வாயுவின் அளவு குறைந்து, புவி வெப்பமயமாதல் சற்றே மட்டுப் பட்டிருக்கலாம் என சூழியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

உண்மையில் , கொரோனா ஊரடங்கால், எந்த அளவுக்கு, புவி சூடேற்றம் தணிந்திருக்கிறது? “வெறும் 0.01 டிகிரி அளவுக்குத்தான்” என்கிறார், பிரிட்டனை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக் கழகத்தின் வளிமண்டல இயற்பியலாளரான பியர்ஸ் பாஸ்டர்.’நேச்சர் கிளைமேட் சேன்ஜ்’ இதழில் தன் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள பாஸ்டர், சில யோசனைகளையும் உலக நாடுகளுக்கு முன் வைத்திருக்கிறார்.

நானும் கொரோனாவால் வாழ்வை இழந்தேன் எனப் பாடுகிறான் – ஒரு லாரி டிரைவரின் குமுறல் !

ஊரடங்கால், மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மன மாற்றம் மற்றும் நடவடிக்கை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு ‘பசுமை மீட்பு’ கொள்கைகளை வகுத்து, பொருளாதாரத்தை கட்டமைத்தால், புவி வெப்பமாதலில், 50 சதவீதம் வரை தணிக்க முடியும் என பாஸ்டர் தெரிவித்துள்ளார்.

அதாவது, பெருந்தொற்று ஊரடங்கிற்கு பிந்தைய காலகட்டத்தில், புவி வெப்ப அதிகரிப்பை, 1.5 டிகிரி செல்சியசுக்கு மிகாமல் வைத்திருக்க முடியும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here