Home செய்திகள் இந்தியா நானும் கொரோனாவால் வாழ்வை இழந்தேன் எனப் பாடுகிறான் – ஒரு லாரி டிரைவரின் குமுறல் !

நானும் கொரோனாவால் வாழ்வை இழந்தேன் எனப் பாடுகிறான் – ஒரு லாரி டிரைவரின் குமுறல் !

415
0
lorry
Share

கடுமையான ஊரடங்கு எதிர் பார்த்த பலனைத் தரவில்லை. ஏழை மக்கள் அனைவரும் ‌வாழ்வை இழந்து நொறுங்கிப் போய் விட்டார்கள். பொது மக்களுக்கு இவ்வளவு பெரிய கஷ்டம் வந்தது குறித்து எந்த எதிர் கட்சியும் போக்குவரத்தை 30% ஆவது நடத்த அனுமதித்து இருக்க வேண்டும்.

இவ்வளவு கடுமையான ஊரடங்கு தேவை இல்லை என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சிவசேனா,மம்தா பானர்ஜி, திமுக, அதிமுக என எந்த கட்சியும் இதை கண்டுக்கவில்லை. இப்படிச் சிரமப்பட்டால் தான் BJP க்கும் அதிமுக விற்கும் ஓட்டுப் போட மாட்டார்கள் என எண்ணுகிறார்கள்.

கொரோனாவால் வீழ்ந்தவர்கள் ஏராளம். ஏற்கனவே நொடிந்து போனவனும் கொரோனாவால் தான் வீழ்ந்தேன் என பாட்டு பாடுகிறான்.

கொரோனாவின் வரவு பல பிராடுகளுக்கு நல்ல வாழ்வைக் கொடுத்து உள்ளது.மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவை ஊரடங்கைத் தளர்த்தி மக்களை ஒழுங்கு படுத்தி வாழவைத்திருக்க முடியும்.

லாரி போக்குவரத்துத் துறை, இரயில், பேருந்து போக்குவரத்து, விமான போக்குவரத்து அனைத்தும் சீர் குழைந்து விட்டது. ரியல் எஸ்டேட் மீண்டு வர வாய்ப்பு மிகக் குறைவு. நன்றாக நடந்து வந்த தொழிற்சாலைகள் நான்கு மாத லீவுக்கு பின் மீண்டும் திறந்து பழையபடி நடத்த முடியுமா?

பள்ளிக்கூடங்களில் ஒரு ஆண்டு படிப்பு போச்சு. குறைந்த கூலிக்கு வேலை செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்ப வருவானா? நாட்டின் தொழில் சீரழிந்து மக்கள் வாழ்க்கையை இழந்து விட்டனர் இது உண்மை.

இதே சமயத்தில் ஏற்கனவே பிராடு செய்து நொடிந்து போய் தொழிலதிபர் போல் ஏமாற்றி வாழ்ந்தவனுக்கு கொரோனா நல்ல சாக்காக மாறி விட்டது. லாரிகளுக்கு இந்த ஆண்டு தவணை கட்டவே முடியாது. வரி, இன்சூரன்ஸ் கட்ட முடியாது, F.C செய்ய முடியாது. மீண்டும் நமது தொழில்கள் பழைய நிலைக்கு வர பல ஆண்டுகள் ஆகும்.

கொரோனாவால் வாழ்வு இழந்தவர்கள் 80% ஏற்கனவே கொரோனாவுக்கு முன்பே வாழ்வைத் தொலைத்தவன்.

மத்திய, மாநில அரசுகளின் கொரோனா நடவடிக்கை சரியா?

ஊரடங்கை அமல் படுத்தி வாகன போக்குவரத்தை நிறுத்தி, பள்ளிக்கூடங்களை மூடி, கோயில், உணவு விடுதிகள் மூடி கடுமையான நடவடிக்கை கொரோனா ஒழிப்பிற்கு எடுத்தது.

அதன் பலனாக நன்கு வாழ்ந்தவன், புலம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள், ஆட்டோ, லாரி டிரைவர்கள், மூட்டைத்தூக்கும் தொழிலாளர்கள்,அன்றாடும் ரோட்டில் செருப்பு தைத்து விற்றவன் முதல் அனைத்து சுய தொழில் செய்து பிழைத்து வந்தவனும் வாழ்வில் எல்லாம் இழந்து நடு ரோட்டுக்கு வந்து விட்டனர் . இவர்களில் யாருக்கும் கொரோனாவும் வரவில்லை சாகவும் இல்லை.

இரயில், பேருந்து, விமான போக்குவரத்து ஒரு மனிதனின் நாடி நரம்புகள் போன்றது. அதை ஓடாமல் நிறுத்தி மனிதனை‌ நடைப் பிணமாக ஆக்கி விட்டார்கள். நியாயமான முறையில் தொழில் நடத்தியவனும் நஷ்டம் பட்டு ஓட்டாண்டி ஆகி விட்டான். ஏற்கனவே நஷ்டத்தில் தொழில் நடத்தி மூடு விழாவிற்கு ரெடியாக இருந்தவனும் அய்யோ கொரோனா வந்தது அதன் மூலம் பிழைத்து விட்டோம் என்கிறான். நல்லவனும்,கெட்டவனும் வாழ்க்கையில் ஒன்றாகி விட்டார்கள். நல்லவர்கள் அனைவரும் கொரோனாவால் சீரழிந்து நடு ரோட்டுக்கு வந்து விட்டார்கள். ஏற்கனவே வாழ்விழந்து என்ன செய்வது என்று வாழ்ந்தவனும் இவனோடு சேர்ந்து ஒன்றாகி விட்டார்கள்.

கொரோனாவோடு வாழக் கற்றுக் கொள்வோம்.

நன்றி..
லாரி உதவி மையம்-18605993000


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here