Home செய்திகள் இந்தியா கடல் பாசியில் கொரோனா மருந்து! அமெரிக்கா புது முயற்சி

கடல் பாசியில் கொரோனா மருந்து! அமெரிக்கா புது முயற்சி

381
0
Share

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து நோய் எதிர்ப்புச் சக்திகாக பல்வேறு மருந்துகள் விற்பனை ஆகத் தொடங்கியுள்ளது. அது மட்டுமின்றி ஏராளமான மருந்துகள் புதிதாக விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் அலோபதி மட்டுமல்லாமல் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ போன்ற பல்வேறு சிகிச்சை முறைகள் பிரபலமடைந்துள்ளது.

இந்தியாவை அடுத்து பல்வேறு நாடுகளில் இந்த சிகிச்சை முறை செயல்முறைக்குக் கொண்டு வந்தனர் அந்த மருந்துகளில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் இருப்பதாக நம்புகின்றனர். இந்த வரிசையில் அமெரிக்கா தற்போது புது முயற்சி ஒன்றை எடுத்துள்ளது. அமெரிக்காவில் அமைந்துள்ள ரென்செலேயர் பாலிடெக்னிக்கை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கடல் பாசியின் சாரத்திலிருந்து மருந்து கண்டுபிடித்துள்ளனர்.

கடல் பாசியின் சாரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தானது கொரோனா வைரஸ் பரவலின் வீரியத்தைக் குறைப்பதில், தற்போது பிரபலமாக உள்ள, ‘ரெம்டெசிவிர்’ என்ற அலோபதி மருந்தைக் காட்டிலும் மிகச் சக்தி வாய்ந்ததாக இருப்பதாக் கண்டறிந்துள்ளனர்.

இந்த கடல் பாசியின் சாற்றிலிருந்து கண்டுபிடித்துள்ள மருந்திற்கு ஆர்.பி.ஐ.-27 என்று பெயரிட்டுள்ளனர். மேலும் இந்த மருந்தை ஆய்வகத்தில் சோதனை செய்தபோது தான் ரெம்டெசிவிரைவிட, 10 மடங்கு அதிக சக்தி இருப்பது கண்டறியப்பட்டதாம்.கொரோனா வைரஸ் மனித செல்களைப் பற்றிக் கொண்டு, பல்கிப் பெருகுவதைக் கடல் பாசியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஆர்.பி.ஐ.-27 மருந்து தடுக்கிறது, எனவே நோய்த் தொற்று ஏற்படாமலும், பாதித்தவர்களை எளிதில் காப்பாற்ற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here