Home அறிவியல் கொரோனவால் ஏகப்பட்ட லாபம் ! உயர்ந்த சோலார் மின்னுற்பத்தி..

கொரோனவால் ஏகப்பட்ட லாபம் ! உயர்ந்த சோலார் மின்னுற்பத்தி..

411
0
Share

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகள் போன்றவற்றால் ஏற்படும் புகைகள் பெருமளவு குறைந்தது. அதிலும் இந்த குளிர்காலத்தில் காற்று மாசுபடுதல் இந்தியத் தலைநகர் டெல்லியில் அதிகமாக இருக்கும். இப்போது இந்த காற்று மாசு பாடு ஏதும் இல்லாமல் அனைவரும் நிம்மதியாக உள்ளனர்.

இயற்கை எப்போதுமே ஒரு வழியில் பாதிப்பு ஏற்படுத்தினால் மறு வழியில் நன்மை அளிக்கிறது. அது போல் தான் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அளித்தாலும்,சுற்றுச் சூழல் மூலம் நன்மை அளித்துள்ளது.

இதனால் டெல்லியில் புகை பாதிப்பு இல்லாமல் அப்பகுதியில் உள்ள ஏராளமான சூரிய ஒளி மின் பலகைகளின் மின் உற்பத்தி தற்போது அதிகரித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வினை மேற்கொண்டு ‘ஜூல் ‘ என்ற அந்நாட்டு இதழில் வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிவிப்பில் , மார்ச் மாதத்தில், டில்லி பகுதியில் சூரிய பலகைகளின் மின் உற்பத்தி, 8.3 சதவீதம் அதிகரித்தது. அதே போல் ஏப்ரல் மாதத்தில் 5.9 சதவீதம் கூடுதலாக மின் உற்பத்தி கிடைத்துள்ளது. இதன் மூலம் சூரிய மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு லாபம் கணிசமாக இந்த ஆண்டு உயரும் என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here