Home முகப்பு உலக செய்திகள் சொல்றது ஒண்ணு செய்யறது ஒண்ணு: சீனா மீது இந்தியா கண்டனம்!..

சொல்றது ஒண்ணு செய்யறது ஒண்ணு: சீனா மீது இந்தியா கண்டனம்!..

373
0
Army in ladakh
Share

கிழக்கு லடாக் பகுதியில் படைகளை திரும்ப பெறும் பணி இன்னும் முழுமை அடையவில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இந்தியா -சீனா வீரர்கள் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு இருந்தது. சமீபத்தில் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே நடந்த கைகலப்பில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து எல்லையில் பதற்றம் நிலவியது.

இரு நாட்டு ராணுவ மூத்த அதிகாரிகள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் தங்கள் படைகளை திரும்ப பெற ஒப்புக்கொண்டன. அதன் படி படைகள் பின்வாங்கப்பட்டன.

அங்குள்ள அதிகாரி கூறியதாவது, எல்லையில் படைகளை திரும்ப பெறும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவது உண்மை தான். ஆனால் அப்பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. இரு தரப்பிலும் மூத்த ராணுவ அதிகாரிகள் விரைவில் சந்தித்து முழுமையாக திரும்ப பெறுவது குறித்து விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும். முன்பே கூறியது போல எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதே இரு தரப்பு நோக்கமாக இரு வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here