Home செய்திகள் இந்தியா இந்தியாவில் 8 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!…

இந்தியாவில் 8 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு!…

303
0
Corona Virus India
Share

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்குகளும் முடிந்து விட்ட நிலையிலும் கொரோனா பாதிப்புகள் அனைத்து மாநிலங்களிலும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 8 லட்சம் பாதிப்புகளை இந்தியா தொட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,22,603 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22,144 ஆக அதிகரித்துள்ளது. மகிழ்ச்சி அளிக்கும் விதமாக 5,16,206 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் புதிதாக 7,862 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,38,461ஆக அதிகரிப்பு.

டெல்லியில் புதிதாக 2,089 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,09,140 ஆக அதிகரிப்பு. மேலும் 42 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால்,மொத்த இறப்பு எண்ணிக்கை 3,300 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதியதாக 3680 பேருக்கு கொரோன தோற்று உறுதி, மொத்த எண்ணிக்கை 1,30,261 ஆக உயர்வு.மேலும் 64 பேர் உயிரிழப்பு. பலியானோர் எண்னிக்கை 1829 ஆக உயர்வு.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here