Home செய்திகள் இந்தியா மக்காத பிளாஸ்டிக் மூலம் சாலைகள் ! அசத்தும் இந்தியா..

மக்காத பிளாஸ்டிக் மூலம் சாலைகள் ! அசத்தும் இந்தியா..

426
0
plastic
Share

இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து இருந்த நேரத்தில் அதனைக் கழிவுகள் அதிகமாகின. இதனால் இதனை எரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. அவ்வாறு எரிக்கும் போது ஓசோன் படலம் பாதிப்படையும், காற்று மாசுபடும் போன்ற சுற்று சூழல் பாதிப்பு அடையும் என்று பிளாஸ்டிக் பயன்பாட்டினை தமிழகத்திலும் ஒரு சில மாநிலங்களிலும் தடை விதித்திருந்தனர்.

இந்த பிளாஸ்டிக் கழிவுகளை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று சிந்தித்து நேரத்தில் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி 2016-இல் ஒரு சிறப்புத் திட்டத்தை அறிவித்திருந்தார். அந்தத் திட்டத்தில் மங்காத, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டே சாலைகள் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 25 ஆயிரத்து 940 டன் பிளாஸ்டிக் கழிவுகள் கிடைக்கிறது. இதில் 60 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றனர். மற்றவை நீர்,காற்று போன்ற இயற்கை ஆதாரங்களை மாசுபடுத்துகின்றன. இவர் தெரிவித்துத் திட்டத்தை அடுத்து முதல் முறையாக 2018 ஹரியானா மாநில குருகிராம் மாநகராட்சியில் பிளாஸ்டிக் கொண்டு சாலைகள் அமைக்கப்பட்டது. ஜம்மு & காஷ்மீரில் 250 கிலோமீட்டர் வரை பிளாஸ்டிக் பயன்படுத்தி அமைக்கப்பட்டது.

இதையடுத்து இந்தியாவின் பல மாநிலங்களில் 1 லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டே சாலை அமைத்துள்ளனர். தோராயமாக ஒரு கிலோ மீட்டர் சாலை அமைக்க 9 டன், ‘தார்’ மற்றும் ஒரு டன் பிளாஸ்டிக் கழிவு தேவைப்படுகிறது. இதன் மூலம் 1 டன் தார் செலவை மிச்சப்படுத்தப்படுகிறது. ஒரு டன் தாரின் விலை 30 ஆயிரம் ரூபாய் ஆகும்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here