Home செய்திகள் இந்தியா தலைமை செயலகத்தில் கொரோனாவா! முதல்வர் EPS மற்றும் OPS பரிசோதனை…

தலைமை செயலகத்தில் கொரோனாவா! முதல்வர் EPS மற்றும் OPS பரிசோதனை…

688
0
EPS and OPS Head Quarters
Share

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆகியோர் தலைமைச் செயலகத்தில் கொரோனா வைரஸ்  (கோவிட் – 19) காய்ச்சல் பரிசோதனை செய்து கொண்டனர்.
சீனா, இத்தாலி மற்றும் மேலும் சில நாடுகளில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்து உள்ளதால், தமிழகத்தில் இதன் தாக்கம் அதிகரித்து வந்துள்ளது, இதனைத் தடுக்க நம் தமிழக அரசு அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து முன்கூட்டியே அதற்கென நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தின் முதல்வரான EPS மற்றும் துணை முதல்வரான OPS கொரோனா அறிகுறி இருக்கிறதா எனத் தலைமை செயலகத்தில் பரிசோதனை செய்து கொண்டனர். இதில் முதல்வர் எடப்பாடிக்கு உடல் வெப்பநிலை 93.1 பாரன்ஹீட், துணை முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு 98.6 பாரன்ஹீட் இருக்கிறது எனக் கண்டறியப்பட்டது.

OPS and EPSதலைமை செயலகம்:

தலைமைச் செயலகம் வரும் அனைத்து நபர்களுக்கும் தெர்மல் ஸ்கேனிங் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.

Stalin

மேலும் கொரோனா தடுப்பு தொடர்பாக, தமிழக முதல்வர் பழனிசாமி அடிக்கடி ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் பூச்சிக் கொல்லி மருந்து  பலவேளை தெளிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடராக பிரதமர் மோடி உரையில், மார்ச் 22 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொது “ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்குமாறு” அனைத்து நாட்டு மக்களுக்கும் தெரிவித்துள்ளார், இதனைத் தமிழக மக்களும் கடைப்பிடிக்குமாறு முதல்வர் மற்றும் துணை முதல்வரும் கூறியுள்ளனர்.
இதனால் COVID-19 ஐ கட்டுக்குள் கொண்டு வரலாம் எனத் தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here