Home செய்திகள் இந்தியா பிரதமர் மோடியின் ஒரே ஒரு நாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவு ஏன்? அதன் பின்னணி...

பிரதமர் மோடியின் ஒரே ஒரு நாள் மட்டும் சுய ஊரடங்கு உத்தரவு ஏன்? அதன் பின்னணி என்ன?

404
0
Prime Minister Modi in india
Share

இந்தியாவில் தற்போது கொரோனாவிற்கு எதிராக மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை அனைத்து இந்திய மக்களும் சுய ஊரடங்கு உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். ஆனால் பிரதமர் மோடி ஒரே ஒரு நாளை தேர்வு செய்தது ஏன் என்று அனைத்து மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் யாருமே எதிர்பார்க்காத வகையில் மிகவேகமான அளவில் பரவி வருகிறது. சீனாவில் மட்டும் இந்த வைரஸ் 80,928 பேர் வரை பாதித்து இருக்கிறது. அங்கு இதுவரை 3,405 பேர் வரை பலியாகி உள்ளனர். இந்தியாவில் 206 பேர் இதனால் பாதிப்படைந்துள்ளனர், 6 பேர் இதனால் பலியாகியுள்ளனர்.

கொரோன வைரஸ் (கோவிட் – 19) இந்தியாவில் தீவிரம் அடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி நேற்றைய முன்தினம் மக்கள் முன் உரையாற்றியுள்ளார் . கொரோனா குறித்து முக்கிய ஆலோசனைகள், திட்டங்களை மோடி அறிவித்தார்.

Prime Minister Modiபிரதமர் கூறிய முக்கிய ஆலோசனைகள் :

பிரதமர் மோடி தனது உரையாடலில் , இவ்வுலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. உலகப் போரை விட இந்த கொரோனா வைரஸ் அதிக நாடுகளைப் பாதித்துள்ளது . ஆகையால் தற்போது கொரோனாவை விட முக்கிய பிரச்சினை ஏதும் இல்லை, கொரோனா தாக்குதலை எளிதாக மக்கள் அனைவரும் எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு இந்திய நாட்டு மக்கள் அனைவரும் விழிப்புடனும், அதனை எதிர்கொள்ளும் தன்மையிலும் இருக்க வேண்டிய நேரம் இது.
Narendra-Modi
அலட்சியமாக இருக்கக்கூடாது:

உலகில் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டுள்ள இந்நிலையில் நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது. கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து மக்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. ஆகவே அனைவருக்கும் உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவை. அடுத்து வரும் சில வாரங்களுக்கு உங்கள் நேரம் எனக்கு வேண்டும் என்றும், நாட்டு மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் பிரதமர் அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.

Modi in india

வீட்டில் இருக்க வேண்டும்:

நம் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை உள்ளனர், இதில் இந்த வைரஸ் எளிதில் இம்மியூனிட்டி குறைத்தவர்களை எளிதில் பதிக்கின்றது, இதனைத் தடுக்க வீட்டில் இருக்கும் 65க்கும் அதிக வயதுடைய முதியவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். நம்மை நாமே தற்காத்துக்கொள்வதே பிரதான கடமையாக உள்ளது; கூட்டங்களைத் தவிர்த்து, அனைவரும் வீடுகளில் இருக்கவேண்டும். கொரோனாவிற்கு எதிராக மார்ச் 22-ந் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை சுய ஊரடங்கு உத்தரவைப் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

இத்திட்டம் ஏன் ?

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த யோசனையைப் பலரும் வரவேற்று இருக்கிறார்கள். இது வைரசை ஓரளவு கட்டுப்படுத்த உதவும் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் இப்படி மக்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. அதிலும் மக்கள் பொதுவாக வெளியே செல்லாத ஞாயிற்றுக்கிழமையை மோடி தேர்வு செய்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.

ஏன் என்றால்! நம் நாட்டில் மற்ற நாடுகளைப் போல் பாதிப்பு வந்த உடன் இந்த முறையை செயல்படுத்துவதுக்குப் பதில் முன்கூட்டியே இந்த செயல் யூகித்திகளை கையாளாம் என்று பிரதமர் அவரது அறிக்கையில் கூறியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here