Home செய்திகள் இந்தியா இந்திய எல்லையில் அதிகளவிலான சீன ராணுவம் ! இந்திய ராணுவம் அதிரடி..

இந்திய எல்லையில் அதிகளவிலான சீன ராணுவம் ! இந்திய ராணுவம் அதிரடி..

717
0
india china
Share

லடாக் எல்லையில் சில பகுதிகளில் சீன மற்றும் இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.  இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மூத்த ராணுவ அதிகாரிகள், பாங்காங் மற்றும் கால்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் ஏராளமாக இந்திய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் சீன ராணுவம் சுமார் 2,000 முதல் 2,500 ராணுவ வீரர்களைக் குவித்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த பகுதிகள் சர்ச்சைக்குரியதாகும்.

INDIA CHINA BORDER

எனவே இந்த பகுதியில் இந்திய ராணுவத்தின் வலிமை மிகச் சிறந்ததாக உள்ளது, என்று ஒரு உயர் ராணுவ அதிகாரி கூறியுள்ளனர்.
இந்த கால்வான் பள்ளத்தாக்கிலுள்ள டார்புக்-ஷாயோக்-தவுலாத் பேக் ஓல்டி சாலை உட்பட பல்வேறு முக்கிய இடங்களைச் சுற்றி சீன ராணுவப் படைகள் முகாமிட்டிருப்பது. இந்திய ராணுவத்திற்குச் சற்று வருத்தமளிக்கிறது.
இது ஒரு சாதாரணமான மீறல் அல்ல, தீவிரமானது” என்று ஓய்வு பெற்ற முன்னாள் வடக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா கூறுகிறார். மேலும் கால்வான் போன்ற பகுதிகளுக்குள் சீனாவின் மீறல் கவலையை ஏற்படுத்துவதாக அவர் கூறுகிறார்.ARMY
இதுவரை சீன படையினரால் பல ஊடுருவல்கள் நடந்துள்ளன. ஆனால், இது மிகவும் கவலைக்குரிய ஒன்று. மேலும் வழக்கமான நிலைப்பாடு அல்ல. எனவே இரு படைகளுக்கிடையில் அதிகரித்து வரும் பதட்டத்தைச் சமாளிக்கப் பேச்சுவார்த்தை முயற்சியை விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும், இரு தரப்பினரும் பாங்காங் த்சோ, டெம்சோக் மற்றும் தவுலாத் பேக் ஓல்டி சாலை உள்ளிட்ட பல பகுதிகளில் நேருக்கு நேர் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
தற்போது, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் அத்துமீறி, 100 கூடாரங்களைச் சீன ராணுவம் வேகமாக அமைத்து வருவதாகவும், பதுங்கு குழிகள் அமைக்கும் வகையில் கன ரக இயந்திரங்களைக் கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை, இந்தியாவுடனான பிரச்சினையைக் கூடிய விரைவில் சுமுகமாக முடித்துக் கொள்ளச் சீனா விரும்பவில்லை என்பதை வெளிக்காட்டுவதாக சில முக்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்பு பூடான், சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் உள்ள டோக்கா லாம் என்ற இடத்தில் இந்திய, சீன படைகள் இடையே கடந்த 2017-ம் ஆண்டு மோதல் ஏற்பட்டது. இதனால் கிட்டத்தட்ட  சுமார் 73 நாட்களுக்கு போா்ப் பதற்றம் நீடித்தது. பின்பு, எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதையடுத்து, அந்த பிரச்சினை முடிவடைந்தது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here