Home முகப்பு உலக செய்திகள் இறப்பு அதிகரிப்பு : ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனை செய்வதை நிறுத்த வேண்டும் !   WHO எச்சரிக்கை …

இறப்பு அதிகரிப்பு : ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை பரிசோதனை செய்வதை நிறுத்த வேண்டும் !   WHO எச்சரிக்கை …

477
0
Share

கொரோனா வைரஸ் ஏப்ரல் மாதத்தில் இத்தாலி ஸ்பெயின் ஆகிய  நாடுகளை வீழ்த்திவிட்டு அமெரிக்காவில்  கோரதாண்டவம் ஆடியது. ஆனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை அங்கே கொரோனா சிகிச்சைக்குப் பலன் தரும் என்று சொல்லப்பட்டது.
அதே போல் கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் மருந்துகள் Tablet-coronaகொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகள் குறைவதாகக் கண்டறியப்பட்டது. இதனால் உலக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகு மருந்தின்  தேவை திடீரென அதிகரித்தது.
சீனா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் ,பிரான்ஸ் ,அமெரிக்கா ஆகிய நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்தி பரிசோதனை ஆய்வுகள் மேற்கொள்கின்றன.
அமெரிக்காவில் ஏற்பட்ட கொரோனா தாக்குதலில் இருந்து மக்களைப் பாதுகாக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அதிகம் தேவைப்படுகிறது என இந்தியாவிடம் கோரிக்கையுடன்  மிரட்டலும் விடுத்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். இதன் மூலம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்தை அதிக அளவில் பெற்றுக்கொண்டார். மேலும் ஒரு கட்டத்தில் நான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தைத் தினமும் உண்கிறேன், உங்கள் முன் நலமாக இருக்கிறேன் எனவும் அறிவித்தார்.
trumphஆனால் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொரோனா வைரசால் ஏற்படும் பாதிப்புகளைக்  கட்டுப்படுத்தினாலும் மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அழைத்துச் செல்ல வாய்ப்புள்ளது என்பதால் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
இந்நிலையில், லான்சட் மருத்துவ ஆய்விதழ் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஆய்வு முடிவின் படி ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து பாதுகாப்பானதல்ல இருதய நோய்ப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இது வெண்டிலேட்டர் பயன்படுத்த வேண்டிய தேவையைக் குறைக்கவில்லை என்றும் இதன் மூலம் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
Whoதற்போது உலக சுகாதார நிறுவன நிர்வாக குழு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்துவ பரிசோதனைகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
இதற்கு முன்பு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருப்பவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் 40,000 மருத்துவ பணியாளர்களுக்குக் கொடுத்து பரிசோதனைகள் தொடங்கப்பட்டன. அதே போல் இந்தியாவில் 4000 மருத்துவ பணியாளர்களுக்கும் இந்த மருத்து கொடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தி ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here