Home செய்திகள் இந்தியா ரஷ்யாவின் கொரோனா மருந்தை பயன்படுத்தலாமா?.. தடுப்பூசியை வாங்கலமா ஆலோசனையில் இந்தியா!…

ரஷ்யாவின் கொரோனா மருந்தை பயன்படுத்தலாமா?.. தடுப்பூசியை வாங்கலமா ஆலோசனையில் இந்தியா!…

387
0
Corona Virus vaccine
Share

உலகம் முழுவதும் கொரோனா பாதித்துள்ள நிலையில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள கொரோனா மருந்தை பயன்படுத்தலாமா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களில் லட்சக்கணக்கான உயிர்பலியை ஏற்படுத்திய கொரோனா வைரஸுக்கு உலக நாடுகள் பல தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் தயாரித்துள்ள ஸ்புட்னிக் 5 என்ற தடுப்பு மருந்து கொரோனாவை முழுமையாக குணமாக்குவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் மகளுக்கு இந்த மருந்தை செலுத்தி பரிசோதித்ததாக செய்திகள் வெளியான நிலையில் உலகம் முழுவதும் இந்த மருந்தை வாங்க பல நாடுகள் ஆர்வமுடன் உள்ளன.

இன்று முதல் கொரோனா தடுப்பு மருந்து ! தமிழகத்தில் பயன்படுத்த முடிவு..

இந்த நிலையில் ரஷ்யாவிலிருந்து இந்த தடுப்பூசியை வாங்க பல நாடுகள் முன்வந்துள்ளன. இந்தியாவும் ரஷ்யாவிடம் இருந்து தடுப்பூசியை வாங்க முடிவு செய்துள்ளதாகவும் அதற்கு முன்னர் இது ஒரு ஆய்வு செய்ய மத்திய அரசு தேசிய நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிபுணர் குழுவை இன்று ஆலோசனை செய்ய உள்ளதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் ரஷ்யாவிடமிருந்து தடுப்பூசி வாங்குவது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி இறக்குமதி செய்தால் உடனடியாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here