Home செய்திகள் இந்தியா முகேஷ் அம்பானிக்கு எதிர்ப்பு தெரிவித்த வோடபோன் இயக்குநர்..

முகேஷ் அம்பானிக்கு எதிர்ப்பு தெரிவித்த வோடபோன் இயக்குநர்..

441
0
Share

முகேஷ் அம்பானியின் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபத்தில் ஏராளமான சாதனைகளைப் படைத்தது. சமீபத்தில் இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் வீடியோ கான்பெரென்ஸ் வாயிலாக பல்வேறு கோரிக்கை வைத்தார். அதில் 2ஜி செல்போன்கள் பயன்படுத்துவதை முழுவதும் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.

அப்போது தான் மோடி அவர்களின் எண்ணமான டிஜிட்டல் புரட்சி இந்தியா முழுவதும் சென்றடையும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த 2ஜி தொழில்நுட்பத்தை இந்தியர்கள் பயன்படுத்துவதைக் குறைத்தால் மட்டுமே 5ஜி தொழில்நுட்பம் ஒரு டிஜிட்டல் இந்தியாவிற்கு செல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகியுள்ளது. இதற்கு வோடபோன் ஐடியா நிர்வாக இயக்குநர் ரவீந்தர் தக்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2 ஜி சேவையை நிறுத்தினாள் ஏழை எளிய மக்கள் கடும் கஷ்டத்திற்கு ஆளாவார்கள். அது மட்டுமில்லாமல் மூத்த குடிமக்கள் 2ஜி சேவையில் தான் கையாளுகின்றனர். அவர்களுக்கு 2ஜி தொழில்நுட்பம் மிகவும் உதவிக்கரமாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது.

அதை நிறுத்திவிட்டால் அவர்கள் எப்படிச் சமாளிப்பார்கள் என்றும் கூறியுள்ளார். இந்திய அளவில் 15 சதவீதம் பேருக்கு மேல் 2ஜி மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களது செலவும் மிச்சம் படுத்தப்படுகிறது. செலவும் குறைவதால் தான் அவர்கள் பெரிதும் 2ஜி சேவையை விரும்புகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here