Home செய்திகள் இந்தியா தங்கம் விலை குறைவு வெள்ளி வீர்ர்..

தங்கம் விலை குறைவு வெள்ளி வீர்ர்..

368
0
Share

தொடர் ஏற்றத்தை அடுத்துத் தங்கத்தின் விலை மீது கடந்த சில தினங்களாகச் சரிந்துள்ளது..

கொரோனா பரவலை அடுத்து தங்கம், வெள்ளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்தன. ஆடி மாதம் வந்த பிறகாவது விலை குறையுமா என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆயினும் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ராக்கெட் வேகத்தில் தங்கம், வெள்ளி விலை உயர்ந்தது.

இதற்குக் காரணம் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் முதலீடு செய்தது தான். ஏனென்றால் கமாடிட்டி வர்த்தகத்தில் தங்கத்தின் மீது ஏராளமான முதலீடுகள் குவிந்து வண்ணம் இருந்தன. இதனால் 11 வருடங்களுக்குப் பிறகு வர்த்தகத்தில் இந்த தங்கம் வெள்ளி விலை உச்சத்தை அடைந்தது. தற்போது சில தினங்களாகத் தங்கம் வெள்ளி விலை சிறிதளவு குறைந்துள்ளது. ஒரு சவரன் 43 ஆயிரத்தைக் கடந்து விற்றுக் கொண்டிருந்த நிலையில், தற்போது 42500 க்கு ஒரு சவரன் விலை குறைந்துள்ளது. இதனால் சிறிதளவு மக்கள் மூச்சு விடுகின்றனர். இது தொடர்ந்து குறையுமா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் பொருளாதார நிபுணர்கள் இது வெறும் கண் துடைப்பிற்கான குறைவுதான் விரைவில் 50000 எட்டுவதற்கான வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்க்கலாம்.

அதே சமயம் வெள்ளியின் விலையில் இன்று ஒரே நாளில் சிறிது உயர்ந்து ரூ.1.50 உயர்ந்து ரூ.84.90க்கு கிராம் என சில்லறையில் விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.51 குறைந்து ரூ.5,314க்கும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.408 குறைந்து ரூ.42,512க்கு சில்லறையில் விற்பனை செய்யப்படுகிறது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here