Home செய்திகள் கொரோனா மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை!.. அரசு அனுமதி!…

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை!.. அரசு அனுமதி!…

486
0
Tamilnadu bus
Share

மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு மழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் மாநிலவாரியாக முதலமைச்சர்கள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை ஆகியோரிடம் பிரமதர் தலைமையிலான குழு ஆலோசனை மேற்கொண்டு பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த 31ஆம் தேதி முதல் 3.0 பொது முடக்கம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து முன்னதாக, அதை நீட்டிப்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம் அன்லாக் 4.0 ஊரடங்கு தளர்வுக்கான புதிய வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது.

அதன் அடிப்படையில் தமிழக அரசு பொது முடக்கத்தில் தற்போது பல்வேறு கட்ட தளர்வுகளை படிப்படியாக ஏற்படுத்தி, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கடந்த 30-ஆம் தேதி மாவட்டங்களுக்கு இடையேயான இ.பாஸ் நடைமுறையை ரத்து செய்யப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு..

தொடர்ந்து மாவட்டத்திற்கு உள்ளாக தனியார் மற்றும் அரசு பேருந்து சேவைக்கு அனுமதியும் வழங்கப்பட்டது. இதனையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு உள்ளாக பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்த சூழலில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தில் ஏரிய பிறகு பயணிகள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

மேலும், தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இதை தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டாம் எனவும், தவிர்க்க முடியாத சூழலில் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here