Home செய்திகள் இந்தியா தமிழகத்தில் இறுதி ஆண்டு தேர்வு குறித்து அறிவிப்பு…

தமிழகத்தில் இறுதி ஆண்டு தேர்வு குறித்து அறிவிப்பு…

398
0
K.p.anbzhagan
Share

தமிழகத்தில் பொறியியல் மற்றும் அனைத்து பல்கலை தேர்வும் வரும் செப்டம்பர் 15க்கு பிறகு நடத்தப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தற்போது தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரிகளில் தேர்வு ரத்து செய்யப்பட்டாலும், இறுதியாண்டு தேர்வு மட்டும் ரத்து செய்யப்படவில்லை. பல்கலைக்கழகமும் ரத்து செய்யக் கூடாது என்று வலியுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் தற்போது தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் இறுதியாண்டு தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு தயாராக இருக்க வேண்டும். ஏனென்றால் செப்டம்பர் 15க்கு பிறகு அனைத்து இறுதியாண்டு தேர்வு நடத்தப்படும். அதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதில் மாணவர்கள் நேரடியாகக் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுதும் வகையில் தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்காக ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போனில் கூகுள் செய்த நடவடிக்கை…

அது மட்டுமில்லாமல் இளநிலை பி.ஆர்க் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் www.tneaonline.org என்ற இணைய தள பக்கத்தில் 7ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here