Home ஆன்மீகம் பைரவர் வழிபாடும் முக்கிய விரத தினங்களும்…

பைரவர் வழிபாடும் முக்கிய விரத தினங்களும்…

379
0
Share

பைரவரை வழிபட்டால் பில்லி, சூனியம் ஏவல் கடுமையான நோய், வழக்குகள் போன்றவற்றில் வெற்றி கிட்டும் என்பார்கள். இதில் எந்த தினங்களில் விரதம் இருந்து வழிபட்டால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

பைரவரை விரதம் இருந்து ஞாயிறு அன்று ராகுகாலத்தில் வாசனை தைல அபிஷேகம் மற்றும் வடைமாலை செய்து அா்ச்சனை செய்தால் திருமணம் கைக்கூடும்.

தொடர்ந்து ஆறு தேய்பிறை அஷ்டமி தினங்களில் விரதமிருந்து பைரவரை சிகப்பு அரளி கொண்டு பூஜித்து வடைமாலை சார்த்தி தேன் கலந்த பேரிச்சை வெல்லப் பாயசம் நைவேத்தியம் செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்…..

வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வில்வ இலை கொண்டு அா்ச்சனை செய்து வர வறுமை நீங்கும்.

அனைத்து நாட்களிலும் விரதம் இருந்து சிவாலயங்களில் உள்ள பைரவரை வழிபட்டு வந்தால் சனீஸ்வரரால் ஏற்படும் பாதிப்புக்கள் வெகுவாக குறைந்துவிடும்.

குழப்பம் நிறைந்த சபரி மலை பயணம் !

சித்திரை மற்றும் ஐப்பசி ஆகிய மாதங்களில் பரணி நட்சத்திரத்தில் இவரை விரதம் இருந்து பூஜித்தால் அதிவிசேஷம். வெள்ளி செவ்வாய் இவருக்கு உகந்த தினங்கள். கா்மவினை தொந்தரவு பில்லி, சூனியம் ஏவல் கடுமையான நோய், வழக்குகளில் வெற்றி இழந்த பொருட்கள் கிடைக்கவும், விபத்துக்கள் ஏற்படாதிருக்கவும் இம்மாதங்களில் விரதம் இருந்து வழிபடலாம்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here