Home முகப்பு ட்ரெண்டிங் செய்திகள் தமிழகத்தில் முதல்முறையாக ஆரணி நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவை வழங்க பேட்டரியால் இயங்கும் வாகனம்….

தமிழகத்தில் முதல்முறையாக ஆரணி நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவை வழங்க பேட்டரியால் இயங்கும் வாகனம்….

488
0
Battery Car on Amma Hotel
Share

தமிழகத்தில் முதல்முறையாக ஆரணி நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவை வழங்க மூன்று சக்கர வாகனத்தை தனியார் நிறுவனம், நகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சிக்குபட்ட பகுதியில் அம்மா உணவகம் இயங்கி வருகின்றன. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தினமும் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அமைச்சர் சேவூர் ராமசந்திரன் தன்னுடைய சொந்த செலவில் உணவை வழங்கி வருகின்றார்.

மேலும் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் இலவசமாக வழங்கபட்டு வரும் உணவைப் பெறுவதற்கு ஒருசில பொதுமக்கள் சிரமபடுவதாக தகவல் வெளியாயின. இதனால் வேலூர் வி.எஸ்.எல். இண்டஸ்டரிஸ் நிறுவனம் 2 லட்சத்து 70ஆயிரம் மதிப்பீட்டில் பேட்டரி மூலம் இயங்கும் 3 சக்கர வாகனம் தமிழகத்திலேயே முதன்முறையாக ஆரணி நகராட்சியில் உள்ள அம்மா உணவகத்திற்கு வழங்க வி.எஸ்.எல் நிறுவனர் அரிகிருஷ்ணன் முடிவு செய்தார்.

Arni City amma hotelஅதன்படி ஆரணி நகராட்சி சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் ஆரணி நகராட்சி ஆணையர் அசோக்குமாரிடம் வழங்கினார். இதில் ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள குறுகிய தெருவிலும் சென்று வறுமையில் வாடி வரும் பொதுமக்களுக்கு அம்மா உணவகம் சார்பில் உணவை வழங்கபடுவதற்கு ஏற்றவாறு வி.எஸ்.எல் நிறுவனம் வழங்கபட்டது.

இதனை தொடர்ந்து நடமாடும் மருத்துவ பரிசோதனை தடுப்பு மையம் பேட்டரி வாகனம் நடமாடும் குடிநீர் வாகனம் மருந்து தெளிப்பான் கை கழுவும் திரவம் உள்ளிட்ட மூன்று சக்கர பேட்டரி வாகனம் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வழங்க நடவடிக்கை எடுக்கபட்டு வருவதாக வி.எஸ்.எல். நிறுவன மேலாளர் அரிகிருஷ்ணன் தெரிவித்தார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here