Home முகப்பு உலக செய்திகள் வந்து சாப்பிட்டால் போதும் ! மக்கள் மகிழ்ச்சி…

வந்து சாப்பிட்டால் போதும் ! மக்கள் மகிழ்ச்சி…

344
0
hotel
Share

கொரோனா ஊரடங்கினால் ஓட்டல் தொழில் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அதற்கு உயிர் கொடுக்கும் வகையில் இங்கிலாந்து அரசு  அசத்தும் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது. அது என்னவென்றால் பொதுமக்கள் ஹோட்டலில் வந்து சாப்பிட்டால் 50% பணத்தை அரசே ஏற்கும் எனத் தெரிவித்துள்ளது.
இதற்காகப் பல கோடி மதிப்பில் பவுண்டுகளை ஒதுக்கி இருப்பதாக ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து அரசு வேலைவாய்ப்பற்றவர்களுக்குப் புதிதாக வேலையில் பணியமர்த்த அவர்களுக்கும் நம்பிக்கை அளித்தது மற்றும் உதவி செய்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இப்படி இருக்க தற்போது ஆகஸ்ட் மாதம் முழுவதும் மக்களின் உண்ணும் உணவில் 50% பணத்தை  அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு தற்போது பொதுமக்களிடையே ஆனந்தம் அளிக்கிறது. தற்போது அங்கு கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே ஹோட்டல், சுற்றுலாத்தலங்கள் ஆகியவை மீண்டும் எழுச்சி பெறும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவு எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையிலேயே ஆகஸ்ட் மாதம் முழுவதும் திங்கள் முதல் புதன் வரை பொதுமக்கள் உண்ணும் உணவில் 50 % அரசு ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தனியார் ஊழியர்கள் மற்றும் சுய வேலை செய்பவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை இங்கிலாந்து அரசு வழங்கி வருகிறது. தற்போது இந்த பாதி பணத்தை வழங்குவது அரசுக்கு மிகப் பெரிய சுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here