Home செய்திகள் இந்தியா ஆட்டோவிற்கு ஓகே விமானத்திற்கு நோ சொன்ன தமிழக முதல்வர்…

ஆட்டோவிற்கு ஓகே விமானத்திற்கு நோ சொன்ன தமிழக முதல்வர்…

513
0
Eps Modi
Share

தமிழகத்தில் நிலவி வரும் கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு மே 31 வரை நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தினம்தினம் புதிய தளர்வுகள் அறிவிக்கப்படுகிறது.

அதில் தற்போது சென்னையை தவிர தமிழ்நாடு முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகிய வாகனங்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஓட்டுநர் மற்றும் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில், 23.5.2020 (நாளை) முதல் (தினமும் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டும்) இயக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

tamilnaduஆனால் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகியவற்றை இயக்க அனுமதி இல்லை. அப்பகுதிகளில் வாழும் ஆட்டோ/ரிக்‌ஷா ஓட்டுநர்களும் வாகனங்கள் இயக்க அனுமதி இல்லை.

சூப்பர் புயல் அம்பன் தாக்கிய இடங்களை நேரில் ஆய்வு செய்தார் பிரதமர் மோடி ! 1000 கோடி நிதியுதவி…

அதேபோன்று அனைத்து பயணிகள் பயன்படுத்தும் வகையில் வாகனங்களில் சானிட்டைசர்களை ஓட்டுநர்கள் வைத்திருக்க வேண்டும். கட்டாயம் ஓட்டுநர்களும், பயணிகளும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மேலும், ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகியவற்றை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும் மத்திய மாநில அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.

eps

மேலும் தமிழகத்தில் மட்டும் விமான சேவை தொடங்க வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.

இந்தியாவில் விமான போக்குவரத்து தொடக்கம் .. அதற்கான புதிய விதிமுறைகளும், கெடுபிடிகளும் !

இந்நிலையில் வரும் 25-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று ஹர்தீப் சிங் பூரி நேற்று முன்தினம் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து வரும் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் படிப்படியாக விமான சேவை தொடங்க உள்ளது.

ஆனால் இந்த உள்நாட்டு விமான சேவையில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய விமான சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விமான சேவை தொடங்கினால் வேறு மாநிலங்களில் தங்கியுள்ள தமிழர்களும், தொழிலதிபர்களும் தமிழகம் வர வாய்ப்புள்ளது இதனால் மேலும் நோய் பாதிப்பு அதிகரிக்க கூடும் எனவே ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்கலாம் என பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here