Home செய்திகள் இந்தியா EMI செலுத்த மேலும் 3 மாத கால அவகாசம் நீட்டிப்பு ! கடன் சலுகை உட்பட பல்வேறு பொருளாதார...

EMI செலுத்த மேலும் 3 மாத கால அவகாசம் நீட்டிப்பு ! கடன் சலுகை உட்பட பல்வேறு பொருளாதார வளர்ச்சிக்கு நடவடிக்கைகள்..

434
0
RBI Governer
Share

வங்கிகளில் ரெப்போ வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4.0 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதே போல், வங்கிகளில் பெற்ற கடன் தவணையைச் செலுத்த மேலும் 3 மாதம் கால அவகாசம் நீட்டிப்பு என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளார்.
Rbi sakthi kandha dassகொரோனா வைரஸ் பரவல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கினால்  ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை அறிவிக்க இன்று மூன்றாவது முறையாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியிருப்பதாவது,
வங்கிகளில் ரெப்போ விகிதம் மேலும் 40 புள்ளிகள் குறைக்கப்படும். இதனால், 4.4 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. ரெப்போ விகிதம் குறைப்பால், வீடு, வாகனம் உள்ளிட்ட வங்கிக் கடன்கள் மீதான வட்டி குறைய வாய்ப்பு உள்ளது. இதில்   ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாக குறைக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
ஏற்கனவே பெற்றுள்ள வங்கிக் கடன்களான வீடு, வாகனம் உள்ளிட்டவற்றிற்கு EMI செலுத்துவதற்கான சலுகை ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் என மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதற்கு முன்பு மார்ச்.27ம் தேதி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக ரெப்போ வட்டி விகிதம் .75  புள்ளிகள் குறைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்தை 3.75 சதவீதமாகக் குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
அதிலும் முக்கியமாக, பொருளாதார சந்தை நடவடிக்கைகளை முன்னேற்றுவது, வணிகத்துக்கு உதவி செய்வது, நிதித்துறை நெருக்கடிகளைக் குறைப்பது, மாநில அரசுகள் சந்தித்து வரும் நிதிப் பற்றாக்குறையைச் சீர் செய்வது போன்றவற்றைச் சுட்டிக் காட்டினார்.
குறு , சிறு தொழில்களுக்கு 15,000 கோடி கடன் உதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்  என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு வட்டியில் சில சலுகைகளுடன்  கடன் வசதி அளிக்கப்படும். குறு நிறுவனங்கள் கடன் தவணையைச் செலுத்தக் கூடிய கால அவகாசம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்படும்.
மேலும் இந்தியாவில் கிட்டத்தட்ட 487 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது என்றும் அவர் பேசியபோது தெரிவித்திருந்தார்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here