Home செய்திகள் இந்தியா இந்தியாவில் விமான போக்குவரத்து தொடக்கம் .. அதற்கான புதிய விதிமுறைகளும், கெடுபிடிகளும் !

இந்தியாவில் விமான போக்குவரத்து தொடக்கம் .. அதற்கான புதிய விதிமுறைகளும், கெடுபிடிகளும் !

543
0
airlines
Share

60 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடலில் எதாவது நோய் பிரச்சினைகள் உள்ள பயணிகள் போன்ற பாதிக்கப்படக்கூடிய நபர்கள் விமான பயணத்தைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்நாட்டு விமான போக்குவரத்து வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. அதற்காக மூன்றில் ஒரு பங்கு நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் கொரோனா வைரஸ் காலத்தில் விமான போக்குவரத்துக்கான  விதிமுறைகளை வெளியிடும் போது சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உடலில் ஏதாவது நோய் பிரச்சினைகள் உள்ள பயணிகள்  போன்ற பாதிக்கப்படக்கூடிய நபர்கள் விமான பயணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
flightசிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் :
எந்த ஒரு பயணிகளும் பயண நேரத்திற்கு 2 மணி நேரம் முன்பாகவே விமான நிலையம் வர வேண்டும்.
அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
ஆன்லைன் சென்-இன்க்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும், தங்கள் உடைமைகளுக்கான டேக்குகளையும் ஆன்லைனிலே பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு பயணி ஒரு கை பை மற்றும் ஒரு செக்-இன் பேக் மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர், அவை அனைத்திற்கும் ஆன்லைனிலே அனுமதி பெற்று தங்கள் உடைமைகளில் டேக் மாட்டியிருக்க வேண்டும்.
நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பயணிகளுக்கு அனுமதி கிடையாது.
எந்த ஒரு பயணியும் கட்டாயம் ஆரோக்யா சேது செயலி பயன்படுத்த வேண்டும் அப்படி இல்லையெனில், சுய அறிக்கை படிவம் மூலம் உடல்நல தகவல்களைத் தரலாம்.
அரசு அறிவித்துள்ள சமூக இடைவெளியை அனைத்து இடங்களிலும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
விமான நிலையத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை :
பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
தெர்மல் சோதனை வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.
கவுண்டரில் உடைமைகளை வைத்த பிறகு, அது குறித்த ரசீதுகள் பயணிகளின் தொலைப்பேசிக்கு எஸ்எம்ஸ் மூலம் உறுதிப் செய்யப்படும்.
விமான நேரத்திற்குக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது முன்பு பைகளை வைக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு ஊழியர்கள் பயணிகளுடன் குறைந்தபட்ச அளவிலே உடல் ரீதியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.
பயணிகள் அனைவரும் கட்டாயம் தங்களது மொபைல்களில் ஆரோக்யா சேது செயலியை வைத்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு இந்த பயன்பாடு தேவையில்லை.
சமூக இடைவெளி கடைப்பிடிக்கவும் உடல் ரீதியான தொடர்பைக் குறைக்கவும் வட்டங்கள், சதுரங்கள் அல்லது தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும்.
போர்டிங் கேட் அருகே பயணிகளுக்கு முகக்கவசம், பாதுகாப்பு உபகரணம், கிருமி நாசினி போன்றவை  அளிக்கப்படும்.
போர்டிங் கேட் அருகே பயணிகளின் உடல் முழுவதும் ஸ்கேன் செய்யப்படுவர், அங்கு தங்களது ஐடி கார்டுகளை  ஊழியர்களிடம் காட்ட வேண்டும்.
விமானத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் :
பயணிகள் வரிசையாக விமானத்தில் ஏற வேண்டும்.
பயணிகள் விமானத்தில் கழிவறையைக் குறைந்த அளவில் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதேபோன்று குழந்தையுடனும் வயதானவருடனும் ஒரேயொருவர் மட்டும் அனுமதிக்கப்படுவர்.
செய்தித்தாள்கள், பத்திரிகைகளை என எந்த ஒரு  பொருளுக்கும் விமானத்திற்குள் எடுத்து வருவதற்கு அனுமதி இல்லை.
பயணிகள் தங்கள் உடைமைகள் வரும் வரை சமூக இடைவெளியுடன் காத்திருக்க வேண்டும்.

Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here