Home அறிவியல் பயங்கரவாதிகளுக்கு ஆயுதமாகுமா நோய்க்கிருமிகள் ?

பயங்கரவாதிகளுக்கு ஆயுதமாகுமா நோய்க்கிருமிகள் ?

352
0
Share

ஆய்விதழ் ஒன்றில் சட்டக்கல்லூரி ஆராய்ச்சியாளர் விவேக் வாத்வா நோய்க்கிருமிகளைக் கொண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் பயங்கரவாதிகள் எந்தவித ஆயுதங்களும் இன்றி மனிதர்களை அழிக்க வைரஸ், பாக்டீரியாக்கள் போன்றவற்றை ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்பு உண்டு என்று அண்மையில் வெளியாகி உள்ள பாரின் பாலிசி என்ற வெளியுறவு கொள்கை குறித்த ஆய்வுகளில் விவேக் வாத்வா கூறியுள்ளார்.

விரிவான கட்டுரையை அவர் அந்த இதழில் வெளியிட்டு உள்ளார். அதன்படி தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஒரு முன்னோட்டமாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால் இதை வைத்து பல்வேறு வர்த்தகங்கள் தற்போது நிகழ்ந்து வருகிறது. இதிலிருந்து நாம் ஒரு நல்ல பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். இனிமேல் முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.

மகாளய அமாவாசையில் தர்ப்பணம் ஏன் ?

இந்த கொரோனா வைரஸ் இயற்கையாக உருவான தானாகவே இருந்தாலும் மிகப்பெரிய கேடு விளைவித்துள்ளது. இனி இது போல் கேடு விளைவிக்கும் தொற்றுகளைப் பயங்கரவாதிகள் தொழில்நுட்பங்களைக் கொண்டு உருவாக்கிப் பரவி விட வாய்ப்புள்ளது என்று இதைச் சுட்டிக் காட்டியுள்ளார். கிரிஸ்பர் போன்ற மரபான தொழில்நுட்பங்களை வைத்து முதலில் சிறிய பயங்கரவாத குழுக்கள் இந்த தொற்றை ஏவி விட முடியும் என்றும் எச்சரித்துள்ளார்.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here