Home செய்திகள் இந்தியா IPL போட்டிக்காக 9 இமோஜிகளை அறிமுகப்படுத்திய டிவிட்டர்..

IPL போட்டிக்காக 9 இமோஜிகளை அறிமுகப்படுத்திய டிவிட்டர்..

336
0
Share

இந்தியாவில் பிரபலமாக விளங்கும் IPL கிரிக்கெட் போட்டி இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பின்பு ஐக்கிய அமீரகத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்ததை அடுத்து அங்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி IPL கிரிக்கெட் போட்டி நடக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்து. தற்போது 19ஆம் தேதி IPL கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. அனைத்து வீரர்களும் ஐக்கிய அமீரகம் சென்று பயிற்சியில் முழு வீச்சுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல் போட்டி மும்பைக்கும் சென்னைக்கும் நடக்க உள்ளது. எனவே ரசிகர்கள் ஆரவாரத்துடன் உற்சாகப்படுத்தக் காத்திருக்கின்றனர். ஆனால் இந்த கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் யாரும் பங்குபெற முடியாது.

எனவே IPL போட்டியைக் காண டிவிட்டர் புதிதாக டைம் லைனில் இருந்து க்ரௌட் லைவ்வின் என்ற ஒரு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் இருந்த இடத்திலிருந்தே போட்டியைப் பார்க்க வசதி செய்துள்ளது.

ஈமோஜிகள் மூலம் உற்சாகத்தை அதிகரிக்க டிவிட்டர் சிறப்புக் குழு ஈமோஜிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆங்கிலம் மட்டும் அல்லாமல் 6 மொழிகளில் ஹாஷ்டாக் வாயிலாக வெளிப்படுத்த வழிவகை செய்துள்ளது. இதனால் அனைத்து அணி ஈமோஜிகள் ஹேஷ்டேக்குகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது: #OneFamily, #WhistlePodu, #PlayBold, #KorboLorboJeetbo, #SaddaPunjab, #OrangeArmy, #HallaBol, மற்றும் #YehHaiNayiDilli.

பயங்கரவாதிகளுக்கு ஆயுதமாகுமா நோய்க்கிருமிகள் ?

இந்த ஒன்பது இமோஜிகள் மூலம் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகள் உற்சாகப்படுத்தி ஆதரவு கொடுக்கலாம் என்று டிவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here