Home செய்திகள் இந்தியா ஆப்பிள் நிறுவனத்தின் அட்டகாசமான ஐ போன்.. ஒருவழியாக தற்போது வெளியிட்டுள்ளது…

ஆப்பிள் நிறுவனத்தின் அட்டகாசமான ஐ போன்.. ஒருவழியாக தற்போது வெளியிட்டுள்ளது…

1296
0
iPhone SE (2020) With Apple A13 SoC news
Share

ஒருவழியாக ஆப்பிள் நிறுவனத்தின் இரண்டாவது iPhone SE மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஆனால் அதன் பெயர் ஐபோன் எஸ்இ2 அல்ல!

பல மாத காலம் எதிர்பார்ப்புகளுக்கு பிறகு, பட்ஜெட் ஐபோன் என்று அழைக்கப்படும் ஆப்பிள் ஐபோன் எஸ்இ (2020) அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது. இதன் மூலம், ஆப்பிள் தனது தற்போதைய வரிசையில் மிகவும் மலிவு விலையிலான ஐபோன் மாடலை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய ஐபோன் எஸ்இ மாடலானது முதலில் ஐபோன் எஸ்இ 2 என்று அறிமுகம் ஆகுமென்று கூறப்பட்டது, பின்னர் அது ஐபோன் 9 என்கிற பெயரின் கீழ் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகின, ஆனால் இது ஆப்பிள் ஐபோன் எஸ்இ (2020) என்கிற பெயரின் கீழ் அறிமுகம் ஆகியுள்ளது.

இது ஐபோன் 8 மற்றும் முந்தைய வழக்கமான ஐபோன் மாடல்களில் இருக்கும் 4.7 இன்ச் அளவை தக்க வைத்துக் கொண்டுள்ளது, நிச்சயமாக பிளஸ் மாடலில் காணப்பட்ட அளவில் இல்லை.

மிகவும் மலிவு மாடலாக இருந்தாலும் கூட இந்த புதிய ஐபோன் ஆப்பிள் ஏ 13 பயோனிக் சிப்பால் இயக்கப்படுகிறது, இது ஐபோன் 11 தொடருக்கு சக்தி அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐபோன் எஸ்இ (2020) ஆனது IOS 13 மற்றும் டச் ஐடி பிங்கர்பிரிண்ட் சென்சாருடன் வருகிறது.

இந்தியாவில் ஐபோன் எஸ்இ (2020) விலை மற்றும் விற்பனை:

இந்தியாவில் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஐபோன் எஸ்இ (2020) வேரியண்ட்டின் விலை ரூ.42,500 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வகைகளிலும் கிடைக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, மற்ற வகைகளுக்கான இந்திய விலைகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிடவில்லை அல்லது அந்த மெமரி வேரியண்ட்கள் இந்தியாவில் கிடைக்காமல் போகலாம்.

அமெரிக்க விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, புதிய ஐபோன் எஸ்இ (2020) 64 ஜிபி மாடலானது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.30,600 க்கும் மற்றும் 128 ஜிபி மாடலானது தோராயமாக ரூ.38,200 க்கும் மற்றும் இதன் 256 ஜிபி மாடலானது தோராயமாக ரூ.45,000 க்கும் அறிமுகம் ஆகியுள்ளது. ஐபோன் எஸ்இ 2020 ஆனது கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு வண்ண விருப்பங்களில் வெளியாகியுள்ளது.

iPhone SE Apple A13 SoC

ஐபோன் எஸ்இ 2020 அம்சங்கள்:

ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2020 ஆனது 4.7 இன்ச் ரெடினா எச்டி எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது, இது 750×1334 பிக்சல்கள் தீர்மானம் கொண்டது. டிஸ்ப்ளே பேனலில் புதிய ஐபோன் மாடல்களில் காணப்படும் ஹாப்டிக் டச் ஆதரவு உள்ளது.

SWIGGY , ZOMATO டெலிவரி பாய்ஸ் உடலின் வெப்பநிலை ! வாடிக்கையாளர்களின் நலன் கருதி புதிய அப்டேட்…

இது ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றின் ஒரு பகுதியாக இருக்கும் ஏ 13 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய ஐபோனின் பின்புறத்தில் ஒற்றை 12 மெகாபிக்சல் கேமரா சென்சார் (எஃப் / 1.8 துளை) உள்ளது, உடன் ஸ்லோ சின்க் கொண்ட எல்இடி ட்ரூ டோன் ஃபிளாஷூம் உள்ளது. செல்பீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக, முன்பக்கத்தில் 7 மெகாபிக்சல் அளவிலான கேமரா (எஃப் / 2.2)உள்ளது.

ஐபோன் எஸ்இ 2020 -இல் உள்ள இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ax, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் லைட்னிங் போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த புதிய ஐபோன் டச் ஐடி பொத்தானைக் கொண்டுள்ளது. சமீபத்திய அம்சமான ஃபேஸ் ஐடியை கொண்டிருக்கவில்லை, ஏனெனில் அதற்கு சிறப்பு சென்சார்கள் தேவை.

வடிவமைப்பு வாரியாக, ஐபோன் எஸ்இ 2020 ஆனது கடந்த 2017 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 7 இன் வாரிசான ஐபோன் 8 போலவே இருக்கிறது. அளவீட்டில் இது 138.4×67.3×7.3 மிமீ மற்றும் 148 கிராம் எடையும் கொண்டுள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here