Home செய்திகள் இந்தியா ஊரடங்கில் சில தளர்வுகள் ! ஏப்ரல் 20 – க்கு மேல் அமல்….

ஊரடங்கில் சில தளர்வுகள் ! ஏப்ரல் 20 – க்கு மேல் அமல்….

577
0
Home sectraory
Share

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு மே 3 வரை நீடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கினால் இந்திய பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் மக்களும் வறுமையில் வாடுகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டு வரும் 20க்கு மேல் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வு விதிகள், கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை, மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் எவையெல்லாம் இயங்கும் இயங்காது எனத் தெளிவாகச் சொல்லியிருப்பது.Agri

செயல்பட அனுமதியளிக்கப்பட்டவை :

  • கட்டுமானம் மற்றும் வேளாண் தொடர்புடைய அணைத்து பணிகளுக்கும் அனுமதி.
  • உணவுப் பொருட்கள் சார்ந்த தொழிற்சாலைக்கு அனுமதி.
  • 50 % பணியாளர்களுடன் தேயிலை,காபி தோட்டங்கள் செயல்படலாம்.
  • 100 நாள் வேலைத் திட்டத்தில் வேளாண் சார்ந்த பணிகளுக்கு அனுமதி.
  • நெடுஞ்சாலைகளில் உள்ள மெக்கானிக் ஷாப் , உணவகங்களுக்கு அனுமதி.
  • 33 % கொண்டு அரசு ஊழியர்களுடன் அரசாங்க வேலைகளுக்கு அனுமதி.
  • தச்சுவேலை, பிளம்பர், எலெக்ட்ரிஷியன், மோட்டர் மெக்கானிக் போன்ற தொழிலுக்கு அனுமதி.
  • IT நிறுவனங்கள் 50 % ஊழியர்களுடன் செயல்படலாம்.
  • கொரியர் மற்றும் தபால் நிலையங்கள் செயல்படலாம்.
  • டீ கடைகள் இயங்கும்.
  • வேளாண் தொடர்பான கடைகள் இயங்கும்.

செயல்படக்கூடாது எனக் கூறியிருப்பவை :

  • நாடு முழுவதும் மதுபானக் கடைகள் திறக்க அனுமதியில்லை.
  • பொது போக்குவரத்து சார்ந்த வாகனங்கள் எதற்கும் அனுமதியில்லை.
  • கல்வி நிலையங்கள், மற்றும் கேளிக்கை விடுதிகளான மால், தியேட்டர், பூங்காக்களுக்கு அனுமதி இல்லை.
  • அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் பொது மக்கள் செல்ல அனுமதி மறுப்பு திருவிழாக்கள் நடத்த அனுமதி இல்லை.
  • மேலும் அனுமதி பெறப்படாத நிறுவனம், வணிகவளாகங்கள்,தொழில்கள் அனைத்தும் செயல்படக்கூடாது.

மேற்குறிப்பிட்ட பணிகளில் ஈடுபடும் அனைவரும், மத்திய அரசு கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள், பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். முககவசம் அணிவது, சமூக விலகலைக் கடைப்பிடித்தல். இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்போது, மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், நடைமுறையில் இருக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தை, அலட்சியம் செய்யும் வகையில் செயல்படக்கூடாது. இவ்வாறு, உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here